பினராயி விஜயன் நிதி மோசடி: பா.ஜ., தலைவர் 'பகீர்'

Updated : பிப் 16, 2020 | Added : பிப் 16, 2020 | கருத்துகள் (17)
Share
Advertisement

இந்த செய்தியை கேட்க

திருவனந்தபுரம்: கேரள மாநில பா.ஜ., தலைவராக இருந்த, ஸ்ரீதரன் பிள்ளை கடந்த அக்., மாதம், மிசோரம் மாநில கவர்னராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து கேரள மாநில பா.ஜ., தலைவராக யாரும் நியமிக்கப்படவில்லை.

இந்நிலையில், 'கேரள மாநிலத்தில், சி.ஏ.ஏ.,வுக்கு எதிராக சி.பி.எம்., காங்கிரஸ் நடத்தும் போராட்டங்களுக்கு பதிலடி கொடுக்க முடியாததற்கு, பா.ஜ.,வுக்கு மாநில தலைவர் இல்லாமல் இருப்பதே காரணம்' எனக் கேரளத்தில் உள்ள, ஒரே பா.ஜ., எம்.எல்.ஏ-.,வான ராஜகோபால் கருத்து தெரிவித்திருந்தார்.latest tamil news
இவரது கருத்து, பா.ஜ., மேலிடத்திற்கு சென்றது. இதையடுத்து, காங்., மற்றும் இடதுசாரிகளுக்குத் தனது கூர்மையான பேச்சால் அதிரடியான விமர்சனங்களை முன் வைப்பவர் எனும் பெருமையைப் பெற்ற கே.சுரேந்திரன், கேரள மாநில பா.ஜ., தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.


249 வழக்குகளுக்கு சொந்தக்காரர்

கேரள மாநில பா.ஜ., இளைஞரணித் தலைவராக இருந்தவர் சுரேந்திரன். பின், மாநில பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். சபரிமலையில் இளம் பெண்களை அனுமதிக்கும் தீர்ப்புக்கு எதிராகப் பல போராட்டங்களை முன்னெடுத்தவர் சுரேந்திரன். சபரிமலையில் இருமுடி கட்டிச் சென்றதற்காக, கடந்த 2018ம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார். கட்சிக்காக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்ட சுரேந்திரன் மீது, கேரள போலீசார், 249 வழக்குகள் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் அவரை மாநிலத் தலைவராக அறிவித்துள்ளார், பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா.


latest tamil news

இது தான் முதல் லட்சியம்!

சுரேந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கேரளத்தில் பா.ஜ., பயணிக்க இருக்கும் பாதை மிகவும் கடினமானது. வளர்ச்சியை நோக்கி கட்சியை அழைத்துச் செல்வேன். கேரளத்தில் பா.ஜ.,விற்கு பல தலைவர்களை உருவாக்குவேன். மாநில அரசின் ஊழல் முறைகேடுகளுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்துச் செல்வதுதான் என் முதல் லட்சியம். மத்திய அரசு கொடுத்த நிதியை மாநில அரசு கொள்ளையடித்திருக்கிறது. பினராயி விஜயன் அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்துவதை மக்கள் விரும்புகிறார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.

'கேரளாவில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு உள்ளிட்டவற்றிற்கு, போதிய நிதி உதவியை மத்திய அரசு வழங்காத நிலையில், பா.ஜ., தலைவரின் குற்றச்சாட்டு அர்த்தமற்றதாக உள்ளது' என, இடதுசாரிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mindum vasantham - madurai,இந்தியா
17-பிப்-202011:01:29 IST Report Abuse
mindum vasantham பிர்னாயி விஜயன் மேல் கொலை வழக்கும் உள்ளது
Rate this:
Share this comment
Cancel
Ambika. K - bangalore,இந்தியா
17-பிப்-202010:38:38 IST Report Abuse
Ambika. K விஷ கொடுக்கு உள்ள தேள் கொட்டினால் மருந்து உண்டு கம்மிகள் போன்ற கரோனா வைரசுக்கு மருந்து இல்லை
Rate this:
Share this comment
Cancel
sripa - muscat,ஓமன்
17-பிப்-202009:53:10 IST Report Abuse
sripa வாழ்த்துக்கள் . உங்கள் வரவால் கேரளாவில் தாமரை மலரட்டும். ஜெய் மோடி சர்க்கார்.
Rate this:
Share this comment
Srinivasan Desikan - chennai,இந்தியா
17-பிப்-202012:54:27 IST Report Abuse
Srinivasan Desikanஇன்றைய காலகட்டத்தில் குறிப்பாக தென்னிந்தியாவில் தாமரை மலர்வது அவ்வளவு எளிதானது அல்ல காரணம் தமிழ்நாட்டில் ராஜா கேரளத்தில் நீஙகள் என தாமரையை வளர்பதற்கான நிலையை உருவாக்குவதைவிட பிய்த்து எரிவதில் அதிகம் கவனம் செலுத்துகிறீர்கள்,...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X