பொது செய்தி

இந்தியா

பாகுபாடு காட்டாத சமாதான நண்பர்கள்: போலீசை புகழ்ந்து அமித்ஷா பேச்சு

Updated : பிப் 16, 2020 | Added : பிப் 16, 2020 | கருத்துகள் (17)
Share
Advertisement
Delhi, Police, AmitShah, Minister, RaisingDay, Cops, அமித்ஷா, டில்லி, போலீஸ், விழா, உயர்வுநாள், உள்துறை, அமைச்சர்

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: மதம், ஜாதி என பாகுபாடு காட்டாமல், அமைதியையும் பாதுகாப்பையும் பராமரிக்கும் சமாதானத்தின் நண்பர்கள், என போலீசை புகழ்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளார்.

டில்லி போலீஸின் 73வது உயர்வு நாள் விழா இன்று (பிப்.,16) நடைபெற்றது. இதில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்றார். போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட அவர், விழாவில் பேசியதாவது: மதம் அல்லது ஜாதிகளின் அடிப்படையில் பாகுபாடு காட்டாமல் அமைதியையும் பாதுகாப்பையும் பராமரிக்கவே போலீஸ் செயல்படுகிறது. இவர்கள் யாருடைய எதிரியும் அல்ல. சமாதானத்தின் நண்பர்களான இவர்கள், மதிக்கப்பட வேண்டும். டில்லிக்கு செல்லும்போதெல்லாம், போலீஸ் நினைவு சின்னத்தை பார்வையிட்டு, தேசத்திற்காக தங்கள் உயிரை தியாகம் செய்த 35 ஆயிரம் போலீஸ் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துமாறு மக்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.


latest tamil news


தேசத்திற்காக இவர்கள் உயிரை கொடுத்துள்ளனர் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அதேபோல், அவர்களின் பணியின் தன்மையையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். நமது பாதுகாப்புக்காக தான் போலீஸ் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி கூறியிருக்கிறார். அதனாலேயே போலீசை விமர்சிப்பது நல்லதல்ல. டில்லி போலீசை இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேல் தான் தொடங்கினார் என்பது பெருமைக்குரிய விஷயம். இது இந்த துறைக்கே முழு உத்வேகம் அளிக்கிறது என்பது உறுதி. இவ்வாறு அமித்ஷா பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Aarkay - Pondy,இந்தியா
17-பிப்-202002:13:46 IST Report Abuse
Aarkay எங்கள் ஊரில் குல்லா, பர்தா போட்டால், நோ என்ட்ரியில் செல்லலாம் ஹெல்மெட் அணியவேண்டாம் எந்த சிக்னலும் ஒரு பொருட்டேயில்லை இதுபோன்ற சமூகநீதியை நிலைநாட்டும் பாகுபாடுகள் நிச்சயம் உண்டு சட்டங்களெல்லாம் எங்களைப் போன்ற இளிச்சவாயர்களுக்குத் தான்
Rate this:
Cancel
16-பிப்-202021:56:26 IST Report Abuse
ஆப்பு இங்கே கூட தமிழக போலுய்சார் ஸ்காட்லாந்து யார்டு போலுசுக்கு நிகரானவர்னு ஒருத்தர் புகழ்கிறாரே...
Rate this:
Cancel
16-பிப்-202019:14:06 IST Report Abuse
இனியவன் இன்று ஜாமியா பல்கலைக்கழகத்தில் உள்ள நூலகத்திற்குள் நுழைந்த காவலாளிகள் காரணமின்றி மூர்க்கமாக தாக்கிய காணொளி தற்போது வெளியாகி உள்ளது.
Rate this:
Aarkay - Pondy,இந்தியா
17-பிப்-202021:44:55 IST Report Abuse
Aarkayவெரி குட்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X