டில்லியின் வளர்ச்சிக்கு பிரதமரின் ஆதரவு தேவை: கெஜ்ரிவால்

Updated : பிப் 16, 2020 | Added : பிப் 16, 2020 | கருத்துகள் (40)
Share
Advertisement

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: டில்லியின் வளர்ச்சிக்கு பிரதமர் மோடியின் உதவியும், ஆதரவும் தேவை எனவும், கட்சி, மதம், ஜாதி பேதமின்றி செயல்படுவேன் என டில்லி முதல்வராக பதவியேற்று கொண்ட கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.latest tamil newsமூன்றாவது முறையாக டில்லி முதல்வராக பதவியேற்ற பின்னர், விழா மேடையில் கெஜ்ரிவால் பேசியதாவது: தேர்தலில் கிடைத்த வெற்றி எனது வெற்றி அல்ல. உங்களின் வெற்றி. டில்லியின் மகன் முதல்வராகியுள்ளேன். இதனால், மக்கள் கவலைப்பட தேவையில்லை. எனக்கு ஓட்டு போட்டவர்களுக்கும், போடாதவர்களுக்காகவும் உழைப்பேன். நீங்கள் யாருக்கு ஓட்டளித்தீர்கள் என்பது பற்றி கவலையில்லை. டில்லியில் உள்ள 2 கோடி பேரும் எனது குடும்பத்தினரை சேர்ந்தவர் தான். ஆம் ஆத்மி, பா.ஜ., காங்கிரஸ் என எந்த கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, அனைவருக்குமான முதல்வராக செயல்படுவேன். யாரிடமும் பாரபட்சம் காட்ட மாட்டேன். கடந்த 5 ஆண்டுகளில் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படாமல், வளர்ச்சிக்காக பாடுபட்டேன். டில்லியின் வளர்ச்சிக்கு பிரதமர் மோடியின் ஆசி, ஆதரவு தேவை. தேர்தலுக்கு முந்தைய பூசல்களை மறந்து விடுவோம்.


latest tamil newsஎன்னை விமர்சித்தவர்களை நான் மன்னித்து விட்டேன். டில்லி வளர்ச்சிக்காக பாடுபட அனைவருக்கும் வாழ்த்து தெரிவிக்கிறேன். புது வகை அரசியலை நாடு பார்த்துள்ளது. இலவச மின்சார திட்டத்தில் இந்தியாவிற்கே டில்லி எடுத்துக்காட்டாக உள்ளது. நேர்மறையான எங்களின் அரசியல், பல மாநிலங்களை கவர்ந்துள்ளது. இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களுக்கு டில்லி முன்மாதிரியாக உள்ளது. டில்லியை உலகின் முதன்மை நகராக மாற்றுவேன். சாமான்ய மனிதன் டில்லியை நிர்வகித்து வருகிறார். மாநிலத்தை உருவாக்கிய சிற்பிகள் எங்களுடன் உள்ளது பெருமை அளிக்கிறது.


latest tamil newsஇளைஞர்களின் வாழ்க்கையை செதுக்கும் ஆசிரியர்களை நாங்கள் வணங்குகிறோம். டில்லி சுமூகமாக செயல்பட உதவியவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளோம். பதவியேற்பு விழாவிற்கு வருமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்தேன். அவர் வேறு பணிகளில் 'பிசி'யாக உள்ளார். வாழ்க்கையின் அத்யாவசிய தேவைகள் இலவசமாக வழங்கப்படுகிறது. டில்லியில் படிக்கும் மாணவர்களிடமும், சிகிச்சைக்காக வருபவர்களிடமும் கட்டணம் வசூலிக்க முடியாது. இவ்வாறு கெஜ்ரிவால் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (40)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இந்தியன் kumar - chennai,இந்தியா
17-பிப்-202016:04:44 IST Report Abuse
இந்தியன் kumar கெஜ்ரிவால் பேசாமல் பாஜகவில் இணைந்தால் நல்ல எதிர்காலம் உண்டு.
Rate this:
Cancel
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
17-பிப்-202012:43:35 IST Report Abuse
கல்யாணராமன் சு. \\என்னை விமர்சித்தவர்களை நான் மன்னித்து விட்டேன்.....\\அப்படியே நீங்க விமர்சித்தவர்களிடம் மன்னிப்பு கேட்டுவிடுங்கள்... கணக்கு சரியாகிவிடும்.. இல்லையென்றால், இது "ஒரு தலை மன்னிப்பாக" மட்டுமே இருக்கும் .....
Rate this:
Cancel
16-பிப்-202023:55:48 IST Report Abuse
அருண்,  சென்னை மோடி ஜி ஒத்த பைசக்கூட கொடுக்கக்கூடாது... எல்லாமே இலவசம்னு அறிக்கை யாறை கேட்டு விட்ட வாலு? இப்போ பிரதமர் மோடி தயவு வேணுமா உனக்கு... வரிகட்டுபவர்கள் என்ன முட்டாளா? பாகிஸ்தான் காரன் உனக்கு உதவுவான் போ
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X