அரசியல் செய்தி

தமிழ்நாடு

வதந்தி பரப்பும் எம்.பி.,க்களை கைது செய்க: எச்.ராஜா

Updated : பிப் 16, 2020 | Added : பிப் 16, 2020 | கருத்துகள் (101)
Share
Advertisement

இந்த செய்தியை கேட்க

சென்னை: சென்னையில் நடந்த போராட்டத்தில் ஒருவர் கொல்லப்பட்டதாக வதந்தி பரப்பிய காங்., எம்.பி.,ஜோதிமணி, திமுக எம்.பி., செந்தில் கைது செய்யப்பட வேண்டும் என பா.ஜ., தேசிய செயலர் எச்.ராஜா வலியுறுத்தி உள்ளார்.



latest tamil news



சென்னையில் கடந்த 2 நாட்களுக்கு முன்னதாக குடியுரிமை சட்டத்தை எதிர்த்து பல்வேறு முஸ்லிம் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் போலீசாருக்கும், ஆர்பாட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசார் லேசான தடியடி நடத்தினர். இதில் போலீசார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. ஒருவர் கொல்லப்பட்டதாக கூறப்பட்டது.
இது தொடர்பாக எச்.ராஜா அவரது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:


latest tamil news



சென்னை வண்ணாரப்பேட்டையில் முஸ்லீம் வன்முறையாளர்களால் துணை கமிஷனர் விஜயகுமாரி, ஆய்வாளர் ராஜ்குமார், பெண்காவலர் கலா ஆகியோர் தாக்கப்பட்டனர். சிகிச்சை பெற்று வரும் காவலர்களை சென்னை மாநகர காவல்துறை ஆணையர் மருத்துவ மனையில் சென்று பார்வையிட்டார். வன்முறையாளர்கள் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஆனால் நடவடிக்கை?
சிஏஏ போராட்டத்தில் காவல்துறை நடவடிக்கையில் ஒருவர் கொல்லப்பட்டதாக வதந்தி பரப்பிய காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி அவர்களும் திமுக எம் பி செந்திலும் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்.



நாச்சியாரை அவமதித்தவர்


சிஏஏ எதிர்ப்பு போராட்டம் என்கிற போர்வையில் முஸ்லீம் வன்முறையாளர்களால் காவல்துறையினர் தாக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், போராட்டக்காரர்களை தாக்கக்கூடாது துன்புறுத்தக் கூடாது என்று தூண்டி விடுகிறார் வைரமுத்து. ஆண்டாள் நாச்சியாரை அருவருக்கத்தக்க விதத்தில் அவமதித்தவரிடம் நேர்மை இருக்குமா ?இவ்வாறு ராஜா கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (101)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - கோல்கத்தா ,இந்தியா
17-பிப்-202016:59:33 IST Report Abuse
Nallavan Nallavan ஜோதிக்கு ..... கொழுப்பு ஜாஸ்தி .....
Rate this:
Share this comment
Cancel
Ravi - Chennai,இந்தியா
17-பிப்-202013:41:57 IST Report Abuse
Ravi இங்கே போலீஸ் லத்தி எடுத்துக்கிட்டு போவர்த்துகே அதிகாரம் இல்லை ,
Rate this:
Share this comment
Cancel
17-பிப்-202013:13:43 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் இவங்களாவது , கைதாவது , செய்வதாவது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X