பொது செய்தி

இந்தியா

புனித தலங்கள் மேம்படுத்தப்படும்: பிரதமர் மோடி

Updated : பிப் 16, 2020 | Added : பிப் 16, 2020 | கருத்துகள் (16)
Share
Advertisement
varanasi, PmModi, deendayalUbatyaya, பிரதமர்மோடி, வாரணாசி, புனிததலங்கள்

இந்த செய்தியை கேட்க

வாரணாசி: வாரணாசியுடன் சேர்ந்து நாட்டில் உள்ள மற்ற புனித தலங்களும் தொழில்நுட்ப உதவியுடன் மேம்படுத்தப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

உ.பி., மாநிலம் வாரணாசி சென்ற பிரதமர் மோடியை, கவர்னர் ஆனந்திபென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்னர், ஜன்கம்வடி மடத்திற்கு சென்று வழிபாடு நடத்தினார். உடன் உ.பி., முதல்வர் யோகி. ஆதித்யநாத் மற்றும் கர்நாடக முதல்வர் எடியூரப்பா உடன் இருந்தனர்.


latest tamil news



பின்னர் அவர் கூறுகையில், சில நாட்களுக்கு முன்னர் ராமர் கோயில் கட்டுவதற்காக ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்திரா என்ற அறக்கட்டளை அமைக்கப்படும் என அரசு அறிவித்தது. இந்த அறக்கட்டளை, ராமர் கோயில் கட்டுவதை கண்காணிப்பதுடன், முடிவுகளை மேற்கொள்ளும் என்றார்.


latest tamil news



இதனை தொடர்ந்து வாரணாசியில் இருந்து இந்தூர் செல்லும் 'காசி மஹகல் எக்ஸ்பிரஸ்' ரயில்சேவையை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

தொடர்ந்து வாரணாசியில் அமைக்கப்பட்ட பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா நினைவு மண்டபத்தை நாட்டிற்கு அர்ப்பணித்தார். தொடர்ந்து 63 அடி உயர பஞ்ச லோக சிலையையும் மோடி திறந்து வைத்தார்


latest tamil news



பின்னர் மோடி பேசியதாவது: தீன்தயாள் உபாத்யாயா நினைவிடம் இங்கு கட்டப்பட்டுள்ளது. இந்த பெரிய சிலை, இனி வரும் தலைமுறையினரையும் ஈர்க்கும். அவரின் எண்ணங்கள் மற்றும் கொள்கைகள் அனைவரையும் கவரும். 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் குறித்து அனைவரும் பேசுகிறோம். இதில், சுற்றுலாத்துறையும் அடங்கும். இந்த இலக்கை அடைவதில், இயற்கையை தாண்டி, பாரம்பரிய சுற்றுலாவும் முக்கிய பங்கு வகிக்கும். வாரணாசியுடன் இணைந்து நாட்டில் உள்ள புனித தலங்கள், நவீன தொழில்நுட்ப உதவியுடன் மேம்படுத்தப்படும் என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
16-பிப்-202021:53:34 IST Report Abuse
ஆப்பு இன்னிக்கித்தான் சமயபுரம் போனேன். டெண்ட் கொட்டாய்க்கு போறமாதிரி ஒரு கியூ வரிசை. அதுல கால் வைக்க முடியாம பழைய துண்டு, வேட்டியெல்லாம். பாப்கார்ன், வாட்டர் பாட்டில், ஐஸ்கிரீம்னு ஒரே குப்பை. ஒரு ஆள் கிளீன் பண்றதில்லை. வர்ரவன் சாமி கும்புட வர்ரானா இல்லை பாப்கார்ன், ஐஸ் கிரீம் தின்னுட்டு குப்பை போட வர்ரானான்னு தெரியலை. வயசானவங்க பாடு திண்டாட்டம். கியூவில் எவனுக்காவது ஏதும் ஆச்சின்னா வெளியேற வழியே இல்லை. கோவில்ல துட்டு வசூலாகுற அளவுக்கு வசதிகள் இல்லைங்கறதுதான் உண்மை.
Rate this:
Share this comment
Aarkay - Pondy,இந்தியா
17-பிப்-202021:50:11 IST Report Abuse
Aarkayநான்கூட இன்னிக்கிதான் வேளாங்கண்ணி போனேன் யேசுவையும், மாதாவையும் ஹிந்துவாக கன்வெர்ட் செய்துவிட்டிருக்கிறார்கள் அவர்களே ரதம், தேர், கற்பூர ஆராதனை என்று ஒரே அமர்க்களம்தான் போங்கள் ஏசுவுக்கு நாமமும், விபூதியும் போடாததுதான் குறை நேற்று நாகூர் சென்றிருந்தேன். வாசனை குடலைப்பிடுங்கியது. சுத்தமாய் பராமரிக்கவேண்டாமா?...
Rate this:
Share this comment
Cancel
Narayanan Muthu - chennai,இந்தியா
16-பிப்-202021:34:52 IST Report Abuse
Narayanan Muthu aaha எல்லோரும் ஒருமுறை ஜோராக கை தட்டுங்கள்.
Rate this:
Share this comment
Cancel
Mango Mani - Bangalore,இந்தியா
16-பிப்-202020:36:04 IST Report Abuse
Mango Mani கோவில் மசூதி சர்ச்ன்னு யோசிக்காம ...புதுசா யோசிங்க ஜி...
Rate this:
Share this comment
Aarkay - Pondy,இந்தியா
17-பிப்-202001:33:34 IST Report Abuse
Aarkayஅதை மௌல்விகளுக்கும், பங்குத்தந்தைகளுக்கும் கூட சொல்லுங்கள். அரசியல் செய்யாமல் மதப்பணி ஆற்றச்சொல்லுங்கள். இந்துக்கோவில்கள் நிர்வாகத்தை மட்டும் (HR&CE) அரசே ஏற்று நடத்துவதைப்போல, தேவாலயங்களும், மசூதிகளும்கூட அரசே ஏற்று நடத்தவேண்டும். தேவையற்ற நிகழ்வுகள், செயல்களுக்காக தொழுகை இடங்கள் துஷ்ப்ரயோகம் செய்யப்படுவது அப்போதுதான் தடுக்கப்படும்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X