புனித தலங்கள் மேம்படுத்தப்படும்: பிரதமர் மோடி| Dinamalar

பொது செய்தி

இந்தியா

புனித தலங்கள் மேம்படுத்தப்படும்: பிரதமர் மோடி

Updated : பிப் 16, 2020 | Added : பிப் 16, 2020 | கருத்துகள் (16)
Share
varanasi, PmModi, deendayalUbatyaya, பிரதமர்மோடி, வாரணாசி, புனிததலங்கள்

இந்த செய்தியை கேட்க

வாரணாசி: வாரணாசியுடன் சேர்ந்து நாட்டில் உள்ள மற்ற புனித தலங்களும் தொழில்நுட்ப உதவியுடன் மேம்படுத்தப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

உ.பி., மாநிலம் வாரணாசி சென்ற பிரதமர் மோடியை, கவர்னர் ஆனந்திபென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்னர், ஜன்கம்வடி மடத்திற்கு சென்று வழிபாடு நடத்தினார். உடன் உ.பி., முதல்வர் யோகி. ஆதித்யநாத் மற்றும் கர்நாடக முதல்வர் எடியூரப்பா உடன் இருந்தனர்.


latest tamil news



பின்னர் அவர் கூறுகையில், சில நாட்களுக்கு முன்னர் ராமர் கோயில் கட்டுவதற்காக ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்திரா என்ற அறக்கட்டளை அமைக்கப்படும் என அரசு அறிவித்தது. இந்த அறக்கட்டளை, ராமர் கோயில் கட்டுவதை கண்காணிப்பதுடன், முடிவுகளை மேற்கொள்ளும் என்றார்.


latest tamil news



இதனை தொடர்ந்து வாரணாசியில் இருந்து இந்தூர் செல்லும் 'காசி மஹகல் எக்ஸ்பிரஸ்' ரயில்சேவையை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

தொடர்ந்து வாரணாசியில் அமைக்கப்பட்ட பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா நினைவு மண்டபத்தை நாட்டிற்கு அர்ப்பணித்தார். தொடர்ந்து 63 அடி உயர பஞ்ச லோக சிலையையும் மோடி திறந்து வைத்தார்


latest tamil news



பின்னர் மோடி பேசியதாவது: தீன்தயாள் உபாத்யாயா நினைவிடம் இங்கு கட்டப்பட்டுள்ளது. இந்த பெரிய சிலை, இனி வரும் தலைமுறையினரையும் ஈர்க்கும். அவரின் எண்ணங்கள் மற்றும் கொள்கைகள் அனைவரையும் கவரும். 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் குறித்து அனைவரும் பேசுகிறோம். இதில், சுற்றுலாத்துறையும் அடங்கும். இந்த இலக்கை அடைவதில், இயற்கையை தாண்டி, பாரம்பரிய சுற்றுலாவும் முக்கிய பங்கு வகிக்கும். வாரணாசியுடன் இணைந்து நாட்டில் உள்ள புனித தலங்கள், நவீன தொழில்நுட்ப உதவியுடன் மேம்படுத்தப்படும் என்றார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X