நாங்க இப்படித்தான் - சரவணன்

Added : பிப் 16, 2020
Share
Advertisement
நாங்க இப்படித்தான் - சரவணன்

வில்லன்... ஹீரோவை பின்னுக்குத் தள்ளி ஜொலிக்க முடியுமா; 'முடியும்' என நிரூபித்தவர் சரவணன்; ராட்சசன் திரைப்படத்தின் ராட்சசன். கிறிஸ்டோபர் - மேரி பெர்னான்டஸ் - அனபெல்லா ஜார்ஜ் என முப்பரிமாண வில்லத்தனத்தில் ரசிகர்களுக்கு பந்தி வைத்தவர்.
* மது, புகை ரொம்பவே சகஜமான சினிமா துறை; சரவணன் எப்படி?'ஆக் ஷன் - கட்' இதுக்கு நடுவுல தான் நடிகனுக்கு வாழ்க்கையே! உடலும் மனதும் ஆரோக்கியமா இருந்தாத்தான் இந்த வாழ்க்கை நல்லாயிருக்கும்! இதை உணர்ந்து வாழ்றதால, எனக்கு எந்த பழக்கமும் கிடையாது.
* இந்த உயரத்தை அடைய இதுவரை நீங்க செஞ்சிருக்கிற முதலீடு?கலைஞனுக்கு காலம்தானே முதலீடு; 15 ஆண்டு காலத்தை முதலீடு பண்ணியிருக்கேன். இதுக்கும் அப்பாற்பட்டு சொல்லணும்னா, 'சிங்கிள் டீக்கு வழி இல்லேன்னாலும் சினிமாவை விட்டுப் போயிடக் கூடாது'ங்கிற என் வைராக்கியம் முக்கியமான முதலீடு.
* உங்க அதிகபட்ச, குறைந்தபட்ச ஆசை?வாடகை வீடுன்னாலும் நான், என் மனைவி, குழந்தைன்னு சந்தோஷமான ஒரு வாழ்க்கை. இந்த அழகான வாழ்க்கை, சினிமா வெளிச்சத்தால பாதிச்சிடக் கூடாது; இதுதான் அதிகபட்ச ஆசை! வெவ்வேறு மொழி படங்கள்ல நடிக்கிற வாய்ப்பு கிடைக்கணும்; இது, குறைந்தபட்ச ஆசை.
* இந்த ஆசை... பணம், புகழ், விருதுகளுக்காகத் தானே?'இல்லை'ன்னு மறுக்க முடியாத கேள்வி. ஆனாலும், மனசுக்கு பிடிச்சதை செய்றப்போதான் வாழ்க்கையில திருப்தி கிடைக்கும். அந்த திருப்தி பணம், புகழ், விருதுகளுக்கு அப்பாற்பட்டது; எனக்கு அந்த திருப்தி வேணும்.
* சரி... திடீர்னு ஒரு தயாரிப்பாளர், 10 லட்சம் ரூபாயோடு வந்து 'நீங்கதான் என் படத்தோட ஹீரோ'ன்னு சொன்னா...?ஹா... ஹா... ராட்சசன் வந்ததும் நிஜமாகவே அப்படி ஒருத்தர் வந்தார். ஆனா, அவரோட கதையில எனக்கு உடன்பாடில்லை; அனுப்பி வைச்சிட்டேன். நல்ல கலைக்கும், கலைஞனுக்கும் விலை வைக்க முடியாது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X