மஹா.,வில் இயற்கைக்கு மாறான ஆட்சி: ஜே.பி.நட்டா

Updated : பிப் 16, 2020 | Added : பிப் 16, 2020 | கருத்துகள் (19)
Share
Advertisement
Maharashtra, JPNadda, BJP, NationalPresident, மஹாராஷ்டிரா, ஜேபி நட்டா, பாஜ, பாஜக, தேசிய தலைவர், தனித்துப்போட்டி, முதல்வர்

இந்த செய்தியை கேட்க

மும்பை: மஹாராஷ்டிராவில் இயற்கைக்கு மாறான கூட்டணி அமைந்து, ஆட்சி நடக்கிறது என பாஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா விமர்சித்துள்ளார்.

மஹா.,வில் தேர்தலுக்கு முன் பாஜ., உடன் கூட்டணி அமைத்த சிவசேனா, தேர்தலுக்கு பின்னர் முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்டு, கூட்டணியை முறித்துக்கொண்டது. இதனால் காங்., தேசியவாத காங்., ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, சிவசேனா ஆட்சியமைத்தது. முதல்வராக பொறுப்பேற்ற உத்தவ் தாக்கரே தலைமையில் அமைந்த இந்த கூட்டணிக்கு 'மகா விகாஸ் அகாதி' என பெயரிடப்பட்டது. கொள்கை ரீதியாக ஒத்துவராத கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளதாக விமர்சிக்கப்பட்டது.


latest tamil newsஇந்நிலையில், பாஜ., சார்பில் நவி மும்பையில் நடந்த மாநாட்டில் பாஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பங்கேற்றார். அவர் பேசியதாவது: கடந்த அக்., மாதம் நடந்த மஹா., சட்டசபை தேர்தலில் பாஜ., தலைமையில் ஆட்சி அமைக்கவே மக்கள் ஓட்டளித்தனர். ஆனால், சுயநலத்துடன் சிலர் நடந்து கொண்டு, எதிர்கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சியில் இருக்கின்றனர்.
தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான பாஜ., ஆட்சியில் மாநிலத்தின் வளர்ச்சி சீராக இருந்தது. ஆனால், தற்போதைய அரசு வளர்ச்சிக்கு தடை போட்டுள்ளது. அடுத்துவரும் தேர்தலில் பாஜ., யாருடனும் கூட்டணி அமைக்காமல், தனித்து போட்டியிட்டு ஆட்சியமைக்கும். தற்போது மஹா.,வில் உள்ள ஆட்சி நம்ப முடியாத, இயற்கைக்கு மாறான ஆட்சி. தனித்து போட்டியிட திட்டமிட்டு இருப்பதால் அதற்காக பாஜ.,வினர் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raman Muthuswamy - Bangalore,இந்தியா
17-பிப்-202014:47:53 IST Report Abuse
Raman Muthuswamy What a Funny Logic ?? If a Party forms a Govt., with the support of and/or independently with the BJP, it is "Natural" .. otherwise "Unnatural" ?? Mr Jadda: Please Allow the Parties in Power to run thru' the full-term WITHOUT DESTABILZING IT
Rate this:
Share this comment
Cancel
பிரபு - மதுரை,இந்தியா
17-பிப்-202014:34:20 IST Report Abuse
பிரபு கர்நாடகாவில் ஆட்சியை பிடிச்சது இயற்கையா?
Rate this:
Share this comment
Cancel
16-பிப்-202022:55:49 IST Report Abuse
மாட்டுக்குப்பன் மனிதனுக்காக இயற்கையாக மாடு வளர்த்த காலத்தை அழித்துமாட்டுக்காக மனிதர்களை கொல்வதை இயற்க்கையாக்கியிருக்கிறீர்களே அதை சொல்கிறீர்களா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X