பொது செய்தி

இந்தியா

பயங்கரவாதி மசூத் அசாரை காணவில்லை: பாக்., 'பகீர்'

Updated : பிப் 16, 2020 | Added : பிப் 16, 2020 | கருத்துகள் (75)
Share
Advertisement
MasoodAzhar, Terrorist, Pakistan, Missing, FATF, Terror Financing, மசூத் அசார், பயங்கரவாதி, நிதிதடுப்பு, பாகிஸ்தான், காணவில்லை

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: இந்தியாவில் மும்பை மற்றும் புல்வாமா தாக்குதலில் மூளையாக செயல்பட்ட மசூத் அசார் மற்றும் அவரது குடும்பத்தினரை காணவில்லை என பாக்., தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2008 ல் நடந்த மும்பை பயங்கரவாத தாக்குதல் மற்றும் 2019ம் ஆண்டு பிப்.,14ல் நடந்த புல்வாமா தாக்குதல் ஆகியவற்றில் மூளையாக செயல்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் மசூத் அசார். இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர், பாகிஸ்தானில் பதுங்கி இருந்தார். கடந்த மே 1ல் ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் இவரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்தது. இந்நிலையில், பயங்கரவாதிகளுக்கு நிதி அளித்த விவகாரத்தில், எப்.ஏ.டி.எப்., எனப்படும், நிதி சார்ந்த அதிரடி நடவடிக்கை அமைப்பு, பாகிஸ்தானை கருப்பு பட்டியலில் சேர்த்தது.


latest tamil news



இந்நிலையில், சர்வதேச பயங்கரவாத நிதி தடுப்பு அமைப்பின் சார்பில் கடந்த அக்., மாதம் நடந்த கூட்டத்தில் பங்கேற்ற மசூத் அசாரையும் அவரது குடும்பத்தினரையும் காணவில்லை என பாக்., தெரிவித்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அக்கூட்டத்தில் பாக்., தரப்பில் கூறியுள்ளதாவது: தங்கள் நாட்டில் 16 சர்வதேச பயங்கரவாதிகள் இருந்தனர். அவர்களில் 7 பேர் இறந்துவிட்டனர்.
மற்ற 9 பேரில் லஷ்கர்-இ-தொய்பா தலைவர் ஹபிஸ் சயீது, அல்-கொய்தாவிற்கு நிதி வழங்கிய அப்துல் ரகுமான் உள்ளிட்ட 7 பேர் தங்களுக்கு விதிக்கப்பட்ட நிதி மற்றும் பயண கட்டுபாடுகளில் இருந்து விலக்கு அளிக்க கோரி ஐ.நா. அமைப்பிடம் விண்ணப்பிக்க இருந்தனர். இவ்வாறு பாக்., கூறியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (75)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
17-பிப்-202013:04:37 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் அவன் ராணுவ பாதுகாப்பில் இருக்கிறான் என்று உலகத்துக்கே தெரியும். இதில் நடுவில் கிச்சு கிச்சு மூட்டுவார்கள்.
Rate this:
Share this comment
Cancel
baskaran A.C - al Jubail ,சவுதி அரேபியா
17-பிப்-202012:56:52 IST Report Abuse
baskaran A.C இங்கே மேலப்பாளையத்திலோ அல்லது ஏர்வாடியிலோ தேடினால் கிடைப்பான்
Rate this:
Share this comment
Cancel
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
17-பிப்-202012:31:16 IST Report Abuse
கல்யாணராமன் சு. மசூத் அசார், .... தளபதி நடத்திய 2 கோடி கையெழுத்து இயக்கத்திலே பங்கேற்று கையெழுத்து போட தமிழ்நாட்டுக்கு வந்திருப்பாரோ? ........ தேடிப்பாருங்க ............
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X