இன்று தளபதி... நாளை இலங்கை அதிபர் !

Updated : பிப் 16, 2020 | Added : பிப் 16, 2020 | கருத்துகள் (23)
Share
Advertisement

இந்த செய்தியை கேட்க

கொழும்பு: 'அமெரிக்காவிற்குள் நுழைய, இலங்கை ராணுவ தளபதிக்கு தடை விதிக்கப்பட்டது போல், அதிபர் கோத்தபயா ராஜபக்சே மீதும் அமெரிக்கா தடை விதிக்கலாம்' என, பவுத்த மத பிரிவான அஸ்கிரிய குழு கண்டனம் தெரிவித்துள்ளது.



latest tamil news



இலங்கையில், 2009-ம் ஆண்டு நடைபெற்ற உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டத்தில், வடக்கு பிராந்திய ராணுவப் படைக்குத் தலைமை தாங்கியவர் ஷவேந்திர சில்வா. அந்தப் போரில் நீதிக்குப் புறம்பான கொலைகள், மனித உரிமை மீறல்கள் போன்ற செயல்களில் ஈடுபட்டதாக, சில்வா மீது ஐ.நா., சபை குற்றம் சாட்டியுள்ளது.
இந்நிலையில், கடந்த ஆண்டு, இலங்கையின் ராணுவ தளபதியாக சில்வா நியமிக்கப்பட்டார். இவரின் நியமனத்துக்கு, அமெரிக்காவும் ஐ.நா., சபையும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. 'இவரால் இலங்கைக்கு பெரும் அபாயம் நேரிடும்' என்றும் எச்சரித்தன.


latest tamil news



கடந்த 14ம் தேதி, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செயலர் மைக் போம்போ தன் டுவிட்டர் பக்கத்தில், 'இலங்கையின் உள்நாட்டுப் போரின்போது, நீதிக்குப் புறம்பான கொலைகளில் ஈடுபட்டதால், ஷவேந்திர சில்வாவுக்கு அமெரிக்காவிற்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது' என, குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு, 'ஷவேந்திர சில்வா விவகாரத்தில் அமெரிக்கா தன் முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும்' என, இலங்கை அரசு கேட்டுக்கொண்டுள்ளது.


latest tamil news



இந்நிலையில், இலங்கையில் உள்ள, பவுத்த மத பிரிவான அஸ்கிரிய குழு, விடுத்துள்ள அறிக்கையில், 'இலங்கை மீது அமெரிக்கா செலுத்தி வரும் அழுத்தத்தை வன்மையாக கண்டிக்கிறோம். ராணுவத் தளபதி ஷவேந்திர சில்வாவை அமெரிக்காவிற்குள் நுழைய தடை விதித்துள்ளது இந்த அழுத்தத்தின் வெளிப்பாடு தான். இந்நிலை தொடர்ந்தால், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே மீதும் எதிர்காலத்தில் அமெரிக்கா இவ்வாறான தடையை விதிக்க வாய்ப்புள்ளது' என, தெரிவித்துள்ளது.
இலங்கை அரசிற்கு ஆலோசனை வழங்கும் பவுத்த மத பிரிவான அஸ்கிரிய குழுவின் அறிக்கையால், சில்வா விவகாரத்தில் அமெரிக்காவுக்கு கண்டனம் தெரிவிக்கும் நெருக்கடி, இலங்கை அரசிற்கு ஏற்பட்டுள்ளதாக, எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mei - கடற்கரை நகரம்,மயோட்
17-பிப்-202012:01:55 IST Report Abuse
mei அட, ஞாபகப்படுத்திட்டேப்பா, அடுத்தது கெட்டபாய தான். வச்சி செஞ்சிடுவோம்ல
Rate this:
Share this comment
Cancel
sridhar - Chennai,இந்தியா
17-பிப்-202010:56:43 IST Report Abuse
sridhar // இன்று தளபதி , நாளை இலங்கை அதிபர் // . நம்மாளு அப்பிடி பேசக்கூடியவர் தான். ஏற்கனவே ஜப்பானிய துணைமுதல்வராக இருந்த முன்னனுபவம் உண்டு.
Rate this:
Share this comment
Cancel
Vittalanand -  ( Posted via: Dinamalar Android App )
17-பிப்-202001:44:38 IST Report Abuse
Vittalanand ஐவன் பார்வையே முஷாரப்பின் பார்வை போல இருக்கிறதே. சோகத்துக்காக நம்மை அண்டுகிறான். கொலை ஆயுதற்கு சீனாவை அண்டுகுறான். அமெரிக்கா சீவிசிங்காரித்து நல்லதான் மூக்கருத்திருக்கு.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X