பரந்த மனதோடு செயல்பட வேண்டும்: வாரணாசியில் மோடி பேச்சு| India never lacked resources, skills; needs to work with comprehensive mindset: PM Modi | Dinamalar

பரந்த மனதோடு செயல்பட வேண்டும்: வாரணாசியில் மோடி பேச்சு

Updated : பிப் 16, 2020 | Added : பிப் 16, 2020 | கருத்துகள் (14)
Share

வாரணாசி: இந்தியாவில் வளமும், திறனும் ஒருபோதும் இல்லாமல் இருந்ததே இல்லை. நமக்கு தேவை விரிவான மனதுடன் செயலாற்ற வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.



latest tamil news



உ.பி. மாநிலம் வாரணாசியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, பல்வேறு திட்டங்களை துவக்கிவைத்தார். காஷி ஏக்ரூப் அனெக் என்ற திட்டத்தை துவக்கி வைத்து அவர் பேசியதாவது: முதன்முறையாக நாட்டின் செல்வத்தை உருவாக்குபவர்கள் கஷ்டத்தை எதிர்கொள்ளாத வகையில் வரி செலுத்துவோர் சாசனம் தயாரிக்கப்பட்டுள்ளது. உற்பத்தியை ஊக்குவிக்க வரி 15 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. முதலீட்டாளர்களின் வசதிக்காக, முதலீட்டு அமைப்பு உருவாக்கப்படும்.


latest tamil news



சிறிய அளவிலான தொழில்களை ஊக்கப்படுத்தும் விதமாக, ஒற்றை சாளர மின் தளவாட சந்தையை உருவாக்குவதற்காக, நாட்டில் முதன் முறையாக தேசிய தளவாட கொள்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் தொழில்களை வலுப்படுத்தவும், வேலை வாய்ப்பை உருவாக்கவும் உதவும். பட்ஜெட்டில் உற்பத்தி மற்றும் வணிகத்தை எளிதாக்குவதற்கு சிறப்பு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி., நாட்டில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X