பொது செய்தி

தமிழ்நாடு

இதே நாளில் அன்று

Added : பிப் 16, 2020
Share
Advertisement
இதே நாளில் அன்று

பிப்ரவரி 17, 2014
ஆர்.கே.ஸ்ரீகண்டன்: கர்நாடக மாநிலம், ருத்ரபட்டணம் எனும் ஊரில், 1920 ஜன., 14ல் பிறந்தார். மைசூரு மகாராஜா கல்லுாரியில், பி.ஏ., பட்டம் பெற்றார். தன் மூத்த சகோதரர், ஆர்.கே.வேங்கடராம சாஸ்திரியிடம், முறைப்படி இசை கற்றார். இசை கலைஞர்களான, அரியக்குடி ராமானுஜ ஐயங்கார், முசிறி சுப்ரமணிய ஐயர், மைசூரு வாசுதேவாச்சார், மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர் போன்றோரிடம் பாடம் கேட்டு, தன்னை தொடர்ந்து மேம்படுத்திக் கொண்டார்.
'பத்ம பூஷண், பத்ம விபூஷண்' உள்ளிட்ட விருதுகளை பெற்றவர். நாகசுவர பாணியில், இவரின் பாடும் முறை அமைந்திருப்பது தனிச் சிறப்பு. 60 ஆண்டுகளுக்கும் மேலான இசை பணியில், இரண்டு மணி நேர கச்சேரியை, தன், 92-வது வயதிலும், ஸ்ரீகண்டன் நிகழ்த்தி சாதனை படைத்தவர். 2014 பிப்., 17ல் காலமானார்.
அவர் இறந்த தினம் இன்று.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X