பொதுக்கூட்டத்தில் இளைஞர் கோஷம்: அகிலேஷ் யாதவ் ஆவேச வாக்குவாதம்

Added : பிப் 16, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
 பொதுக்கூட்டத்தில் இளைஞர் கோஷம்: அகிலேஷ் யாதவ் ஆவேச வாக்குவாதம்

கான்பூர்:“பா.ஜ., தலைவர் ஒருவரால், என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது,” என, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் புகார் தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள, கன்னோஜ் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில், சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் பங்கேற்றார். அப்போது, நாட்டில் உயர்ந்து வரும் பணவீக்கம் குறித்து பேசினார்.
திடீரென, கூட்டத்தில் இருந்த ஒரு இளைஞர் குறுக்கிட்டு, 'ஆட்சி அதிகாரத்திற்கு வந்தால், நீங்கள் என்ன செய்வீர்கள்' என கேட்டார். அவரை அருகில் வருமாறு, அகிலேஷ் யாதவ் அழைத்தார். நெருங்கி வந்த அந்த இளைஞர், 'ஜெய் ஸ்ரீராம்' என முழக்கமிட்டார்.கோபமடைந்த அகிலேஷ், 'நீங்கள் பா.ஜ., கட்சியைச் சேர்ந்தவரா' என ஆவேசமாக கேட்டார். அந்த இளைஞர், 'ராமர், கிருஷ்ணர், விஷ்ணு, சிவன் என, அனைத்து கடவுள்களையும் நான் போற்றுவேன்' என கூறினார். இதனால், அங்கு சலசலப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, அங்கு உள்ள போலீஸ் அதிகாரியிடம், அகிலேஷ் யாதவ், 'பாதுகாப்பு வளையத்திற்குள் நுழைந்து, ஜெய் ஸ்ரீராம் என அவர் முழக்கமிட்டது எப்படி. அந்த நபரின் அனைத்து தகவல்களும் எனக்கு வேண்டும். 'அந்த நபர் கையில் இருந்த பையில், என்ன இருந்தது என்பதை கண்டறிய வேண்டும்' என கூறினார்.
தொடர்ந்து, அகிலேஷ் யாதவ் பேசியதாவது: இரண்டு நாட்களுக்கு முன், எனக்கு கொலை மிரட்டல் வந்தது. இந்நிலையில், பாதுகாப்பு வளையத்தை தாண்டி ஒருவர், இங்கே உள்ளே நுழைந்துள்ளார். அவரால் என் உயிர் பறிபோய் இருக்கும். ஒரு பா.ஜ., தலைவரால், என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. மொபைல் போனில் தொடர்பு கொண்டும், குறுஞ்செய்தி மூலமாகவும், எனக்கு அவர் கொலை மிரட்டல் விடுத்து உள்ளார். இந்த விவகாரம் குறித்து, ஓரிரு நாட்களில், நிருபர்கள் சந்திப்பில் தெரிவிப்பேன்.இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - கோல்கத்தா ,இந்தியா
17-பிப்-202016:58:21 IST Report Abuse
Nallavan Nallavan \\\\ இரண்டு நாட்களுக்கு முன், எனக்கு கொலை மிரட்டல் வந்தது. //// சுடலையின் மதுரைச் சம்பவம் நினைவுக்கு வந்திருக்கணுமே ????
Rate this:
Cancel
Nallavan Nallavan - கோல்கத்தா ,இந்தியா
17-பிப்-202016:57:00 IST Report Abuse
Nallavan Nallavan \\\\ அந்த நபர் கையில் இருந்த பையில், என்ன இருந்தது என்பதை கண்டறிய வேண்டும்' //// ஒரே ஒரு பழைய அண்டர்வேர் மட்டும்தான் இருந்துச்சாம் ......
Rate this:
Cancel
Nallavan Nallavan - கோல்கத்தா ,இந்தியா
17-பிப்-202016:56:08 IST Report Abuse
Nallavan Nallavan \\\\ 'பாதுகாப்பு வளையத்திற்குள் நுழைந்து, ஜெய் ஸ்ரீராம் என அவர் முழக்கமிட்டது எப்படி. //// பாதுகாப்பு வளையத்திற்குள் நுழைந்து கடவுள் பேரைச் சொல்லக் கூடாதா ????
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X