மனைவி, மாமியார் உட்பட 4 பேரை சுட்டுக் கொன்ற போலீஸ் ஏட்டு

Added : பிப் 16, 2020
Share
Advertisement
 மனைவி, மாமியார் உட்பட 4 பேரை சுட்டுக் கொன்ற போலீஸ் ஏட்டு

மொகா:பஞ்சாப் மாநிலத்தில், நிலத்தகராறில், மனைவி, மாமியார், மைத்துனர் உள்ளிட்ட நான்கு பேரை சுட்டு கொலை செய்த போலீஸ் ஏட்டு, ஏ.கே., 47 ரக துப்பாக்கியுடன், காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.
பஞ்சாப் மாநிலத்தில், முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையில், காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்குள்ள, மொகா காவல் நிலையத்தில், ஏட்டாக பணியில் இருந்தவர் குல்விந்தர் சிங், 50.இவரது மனைவி ராஜ்விந்தர் கவுர், 45, சில நாட்களுக்கு முன், ஜலால்பூரில் உள்ள அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்றார். குல்விந்தர் சிங், அவரது மைத்துனர் ஜஸ்கர்ன் சிங், 40, ஆகியோர் இடையே, நிலம் தொடர்பாக பிரச்னை இருந்தது. நிலப்பிரச்னை குறித்து பேசுவதற்காக, நேற்று முன்தினம் மாலை, குல்விந்தர் சிங் பணி முடிந்து, மாமனார் வீட்டிற்கு சென்றார். அவர், நேற்று பணிக்கு திரும்ப வேண்டும் என்பதால், ஏ.கே., ௪௭ ரக துப்பாக்கியையும், தன்னுடன் எடுத்து சென்றிருந்தார். மைத்துனருடன் நடந்த பேச்சுவார்த்தையில் கோபம் அடைந்த குல்விந்தர் சிங், தன்னிடம் இருந்த துப்பாக்கியால், மனைவி ராஜ்விந்தர் கவுர், மாமியார் சத்வீந்தர் கவுர், 65. மைத்துனர் ஜஸ்கர்ன் சிங், அவரது மனைவி உபிந்தர்ஜித் கவுர், 32, ஆகியோரை சுட்டுக் கொன்றார்.துப்பாக்கி குண்டு பாய்ந்ததால் காயமடைந்த மைத்துனரின், 10 வயது மகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதன்பிறகு, குல்விந்தர் சிங் துப்பாக்கியுடன் தரம்கோட் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்களின் உடல்களை, போலீசார் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். துப்பாக்கிச் சூடு நடந்த போது, குல்விந்தர் மது அருந்தியிருந்தார் என, போலீஸ் விசாரணையில் தெரியவந்து உள்ளது.சம்பவம் குறித்து, மோகா எஸ்.பி., ஹரிந்தர்பால் சிங் கூறும்போது, ''தலைமை காவலர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X