கொள்ளை போகும் சாமி சிலைகள் ஒடிசாவில் தொடர் திருட்டு

Added : பிப் 16, 2020
Share
Advertisement

புவனேஸ்வர்;பழங்கால சிற்பங்கள் மற்றும் பொருட்களை பாதுகாப்பதற்கான சட்டங்கள், மிகவும் பலவீனமாக இருக்கின்றன என, ஒடிசாவில் நடைபெற்ற, இந்திய கலை மற்றும் கலாசார பாரம்பரியத்திற்கான, தேசிய அறக்கட்டளையின் மாநில ஆய்வரங்கில், தெரிவிக்கப்பட்டது.
ஒடிசாவில், முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையில், பிஜு ஜனதா தளம் ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில், கோவில்களில் சிலைகள் திருடப்படுவதும், அவற்றை வெளிநாடுகளுக்கு கடத்துவதும் அதிகரித்துள்ளது. இது தொடர்பாக, இந்திய கலை மற்றும் கலாசார பாரம்பரியத்திற்கான தேசிய அறக்கட்டளையின் மாநில ஆய்வரங்கம், பிப்., 14ல், புவனேஸ்வரில் நடைபெற்றது.
இதில், அந்த அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளரும், ஒடிசா மாநில முன்னாள் காவல் துறை தலைவருமான, அமியா பூசன் திரிபாதி கூறியதாவது:மாநிலத்தின் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை குறிக்கும் பழங்கால சிலைகள் குறித்த விழிப்புணர்வு, மக்கள் மத்தியில் குறைவாக இருப்பதுடன், அவற்றின் மீது அக்கறையின்றி உள்ளனர். ஒடிசாவில், ௨௨ ஆயிரம் பழங்கால வழிபாட்டு தலங்களில் உள்ள பழங்கால, கல் மற்றும் உலோக சிற்பங்கள் குறித்த, முழுமையான தகவல்கள் இல்லை.
95 சதவீதம்
இந்த கோவில்களில் உள்ள, 95சதவீதத்திற்கும் மேற்பட்ட பழங்கால சிலைகள், தேசிய நினைவுச்சின்னங்கள் மற்றும் தொல்பொருட்கள் காப்பகத்தில், சட்டப்பூர்வமாக பதிவு செய்யப்படவில்லை.பழங்கால பொருட்களை பாதுகாப்பதற்கான, தற்போதைய சட்டங்கள் மிகவும் பலவீனமாக உள்ளன. அவற்றில் திருத்தங்கள் செய்வதுடன், புதிய சட்டங்களை இயற்றுவது காலத்தின் தேவையாக உள்ளது. தேசிய பாரம்பரிய பொருட்கள் பாதுகாப்புக்காக, ஓர் அமைப்பை உருவாக்குவதுடன், அவை தொடர்பான குற்றங்களுக்காக, காவல்துறையில் தனிப்பிரிவு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.இந்திய கலை மற்றும் கலாசார பாரம்பரியத்திற்கான தேசிய அறக்கட்டளை யின், மாநில திட்ட ஒருங்கிணைப்பாளரான, வரலாற்று ஆசிரியர் அனில் திர், 'பழங்கால பிராச்சி பள்ளத்தாக்கு' என, ஓர் அறிக்கையை ஆய்வரங்கில் வெளியிட்டார்.
48 வழக்குகள்
அதுகுறித்து, அனில் திர் கூறியதாவது: மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, 300பழங்கால சிலைகள் மாயமாகி உள்ளன. சிலைகள் மாயமானதாக, பிராச்சி பள்ளத்தாக்கு பகுதி காவல் நிலையங்களில், கடந்த,10 ஆண்டுகளில், 48 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன; ஒன்றில் மட்டுமே குற்றவாளி சிக்கியுள்ளார். இது போன்ற வழக்குகளில் மீட்கப்படும் சிலைகள், அவை இருந்த இடத்திற்கு வந்து சேராமல், காவல் நிலையங்களிலும், தொல்பொருள் துறையின் கிடங்குகளிலும் வைக்கப்பட்டுள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X