வெல்ல முடியாதவர்கள் அல்ல

Updated : பிப் 16, 2020 | Added : பிப் 16, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
 வெல்ல முடியாதவர்கள் அல்ல

!கடந்த லோக்சபா தேர்தலின் போது, பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், யாராலும் வெல்ல முடியாத தலைவர்கள் என, அனைவரும் நினைத்தனர். டில்லி சட்டசபை தேர்தல் முடிவுகளுக்கு பின், அந்த எண்ணம் தவிடு பொடியாகி விட்டது. மதம் இல்லாமல் எந்த நாடும் இல்லை; ஆனால், மதத்துக்கும் தேசபக்திக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை, பா.ஜ., தலைவர்கள் இனியாவது உணர வேண்டும். -சஞ்சய் ராவத், மூத்த தலைவர், சிவசேனா
வாயை அடக்க வேண்டும்
டில்லி சட்டசபை தேர்தல் பிரசாரத்தில், பா.ஜ., தலைவர்கள் சிலர், சர்ச்சைக்குஉரிய வகையில் பேசினர். இனி வரும் பிரசாரங்களில், இதுபோல் பேசுவதை அவர்கள் தவிர்க்க வேண்டும். பீஹாரில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இதில், பா.ஜ., - ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜன சக்தி கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று, ஆட்சியை தக்க வைக்கும். பீஹாரில் எங்களை எதிர்ப்பதற்கு எந்த கட்சியும் இல்லை. -ராம்விலாஸ் பஸ்வான், மத்திய நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சர், லோக் ஜன சக்தி
நடவடிக்கை எப்போது?
டில்லி போலீசார், ஜாமியா பல்கலைக்குள் நுழைந்து, மாணவர்களை கடுமையாக தாக்கும், 'வீடியோ' வெளியாகி உள்ளது. இதைப் பார்த்த பின்பாவது, அத்துமீறிய போலீசார் மீது, மத்திய உள்துறை அமைச்சர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீசார் மீது எந்த தவறும் இல்லை என மீண்டும் மீண்டும் கூறினால், இதில் மத்திய அரசுக்கு உள்நோக்கம் இருப்பது, வெட்ட வெளிச்சமாகி விடும். -பிரியங்கா, பொதுச்செயலர், காங்.,

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
P R Srinivasan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
17-பிப்-202007:59:57 IST Report Abuse
P R Srinivasan யாருமே வெல்ல முடியாதவர்கள் அல்ல. ஆனால் நோக்கமும், முயற்சியும் சிறப்பாக இருக்கவேண்டும். காங்கிரஸ் தங்களை வெல்லமுடியாது என்று நினைத்து மக்கள் விரோத செயல்களை செய்தது. இன்று அவர்கள் நிலைமை மிகவும் கேவலமாகியுள்ளது. நாட்டை சூறையாடி, பொது சொத்தை கொள்ளையடித்த தலைவர்களை வைத்துக்கொண்டு பிஜேபி யை வெல்ல முடியாது.
Rate this:
Share this comment
Cancel
ravi - coimbatore,இந்தியா
17-பிப்-202000:33:52 IST Report Abuse
ravi மக்கள் நன்றாக அறிவர் யார் கரணம் என்று ... டெல்லி தீர்ப்புதான் இன்னுமே எல்லா மாநிலத்திலும்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X