முதல்வருக்கு பேனர் அமைச்சருக்கு அபராதம்

Added : பிப் 16, 2020
Share
Advertisement

ஐதராபாத்:ஐதராபாதில், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்து, விளம்பர பலகை அமைத்த கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சரிடம், பெருநகர மாநகராட்சி அதிகாரிகள், 5, 000 ரூபாய் அபராதம் வசூல் செய்தனர்.தெலுங்கானாவில், முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி நடக்கிறது.
முதல்வர் சந்திரசேகர ராவ் பிறந்த நாள், இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் டி.சீனிவாஸ் யாதவ் சார்பில், முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்து, ஐதராபாதில் பெரிய அளவில் விளம்பர பலகை வைக்கப்பட்டது. விளம்பரம் குறித்த தகவல், ஐதராபாத் பெருநகர மாநகராட்சியின் மத்திய அமலாக்கத்துறை பிரிவிற்கு, சமூக வலைதளம் மூலமாக, பொதுமக்கள் தரப்பில் அனுப்பி வைக்கப்பட்டது. சட்டவிரோதமாக விளம்பரம் வைக்கப்பட்டுள்ளதால், அமலாக்கத் துறை சார்பில், அமைச்சருக்கு, ௫,௦௦௦ ரூபாய் அபராதம் விதித்து, 'இ- - சலான்' அனுப்பி வைக்கப்பட்டது. அமைச்சர் டி.சீனிவாஸ் யாதவ் உடனடியாக அபராதம் செலுத்தியதாக, ஐதராபாத் பெருநகர மாநராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X