சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ.1.24 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்

Added : பிப் 16, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 ரூ.1.24 கோடி மதிப்பிலான  கடத்தல் தங்கம் பறிமுதல்

சென்னை:இலங்கை மற்றும் துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட, 1.24 கோடி ரூபாய் மதிப்பிலான, தங்க கட்டிகளை, சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து, 'ஏர் இந்தியா' விமானம் நேற்று முன்தினம் மாலை, 6:25க்கு, சென்னை வந்தது. அந்த விமானத்தில் வந்த, இலங்கையைச் சேர்ந்த பாத்திமா, 43; பாத்திமா பரீனா ரிஸ்வி, 48; ராமநாதபுரத்தை சேர்ந்த, அப்துல் ஹமீது, 37; ராசிக் அலி, 31, ஆகிய நான்கு பேரை, சந்தேகத்தின் அடிப்படையில், சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில், நான்கு பேரின் ஆசனவாய்களில் இருந்து, 56 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 1.284 கிலோ எடையுள்ள தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.மற்றொரு சம்பவத்தில், கொழும்பில் இருந்து, 'ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்' விமானம் நேற்று அதிகாலை, 2:00 மணிக்கு, சென்னை வந்தது. அந்த விமானத்தில் வந்த, சென்னையை சேர்ந்த, நசீர் அகமது, 28; ராமநாதபுரத்தைச் சேர்ந்த பைசூல் ரகுமான், 23; இலங்கையை சேர்ந்த யாசிர், 49, ஆகியோரை சோதனை செய்தனர். மூவரது ஆசனவாய்களில் இருந்து, 58 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 1.324 கிலோ எடையிலான தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதேபோல, துபாயில் இருந்து, 'இண்டிகோ ஏர்லைன்ஸ்' விமானம் நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு சென்னை வந்தது. அந்த விமானத்தில் வந்த ராமநாதபுரத்தை சேர்ந்த நுாரூல் ஹக், 39, என்பவரை, சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அவர் அணிந்திருந்த ஜீன்ஸ் பேன்ட்டின் இடுப்பு பகுதியில் இருந்து, 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 303 கிராம் எடையுள்ள தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. மூன்று சோதனைகளிலும், 1.24 கோடி ரூபாய் மதிப்பிலான, தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. தங்கம் கடத்திய, எட்டு பேரையும் கைது செய்து, சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Idithangi - SIngapore,சிங்கப்பூர்
17-பிப்-202010:25:41 IST Report Abuse
Idithangi மாட்டியவர்கள் பெயர்கள் எல்லாம் அமைதி மார்க்கம். இவர்களை திருந்தி நல்வழி படுத்த எல்லாம் போராட மாட்டார்களா இந்த ஜமாத்தினர்..?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X