3வது முறையாக டில்லி முதல்வர் கெஜ்ரிவால் பதவியேற்பு: மத்திய அரசுடன் இணைந்து செயல்பட விருப்பம்

Updated : பிப் 18, 2020 | Added : பிப் 16, 2020 | கருத்துகள் (1+ 47)
Share
Advertisement

புதுடில்லி : டில்லி முதல்வராக நேற்று பதவியேற்ற, ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், ''டில்லியின் வளர்ச்சிக்காக, மத்திய அரசுடன் இணைந்து செயல்பட விரும்புகிறேன்; பிரதமர் மோடியின் உதவியையும் எதிர்பார்க்கிறேன்,'' என்றார்.latest tamil news


டில்லி சட்டசபை தேர்தலில் இமாலய வெற்றிபெற்று ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை தக்கவைத்தது. ராம்லீலா மைதானத்தில் நடந்த விழாவில் கெஜ்ரிவால் 3வது முறையாக முதல்வராக பதவி ஏற்றார். கவர்னர் அனில் பைஜால் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். மணிஷ் சிசோடியா, கோபால் ராய் உள்ளிட்ட 6பேர் கேபினட் அமைச்சர்களாக பதவிஏற்றனர். டில்லி அமைச்சரவையில் ஒரு பெண்ணும் இடம்பெறவில்லை.


டில்லியில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், ஆம் ஆத்மி கட்சி, 62 தொகுதிகளில் வெற்றி பெற்று, ஆட்சியை தக்க வைத்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட, பா.ஜ., ஆறு தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. டில்லியில், 15 ஆண்டுகளாக ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ், ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாமல், படு தோல்வியை சந்தித்தது.

இந்நிலையில், டில்லி முதல்வராக, ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், தொடர்ந்து மூன்றாவது முறையாக பதவியேற்றார்.


40 ஆயிரம் பேர்இதற்கான விழா, ராம்லீலா மைதானத்தில் பிரமாண்டமாக நடந்தது. கெஜ்ரிவாலுடன், மணீஷ் சிசோடியா உள்ளிட்ட ஆறு அமைச்சர்களும் பதவிஏற்றனர். டில்லி துணை நிலை கவர்னர் அனில் பைஜால், முதல்வருக்கும், அமைச்சர்களுக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் முன்னிலையில் முதல்வராக பதவியேற்ற பின், கெஜ்ரிவால் பேசியதாவது:

டில்லியில் சட்டசபை தேர்தல் முடிந்து விட்டது; அத்துடன், அரசியலும் முடிந்து விட்டது. பிரசாரத்தின் போது, என் மீது அபாண்டமாக புகார் கூறிய எதிர்க்கட்சிகளை மன்னித்து விட்டேன். நான் டில்லி மக்களின் மகன். நான் முதல்வராக பதவியேற்றுள்ளதால், டில்லி மக்கள், இனி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. இந்த வெற்றி எனக்கு கிடைத்தது அல்ல;

டில்லியில் வசிக்கும் ஒவ்வொரு மக்களுக்கும் கிடைத்தது. டில்லியை, இந்த நாட்டின் முன் மாதிரி நகரமாக மட்டுமல்லாமல், சர்வ தேச அளவில் முன் மாதிரி நகரமாக மாற்ற விரும்புகிறோம். டில்லியில் பல வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த வேண்டியுள்ளது. இதற்காக, மத்திய அரசுடன் இணைந்து செயல்பட விரும்புகிறேன். டில்லியின் வளர்ச்சிக்கு, பிரதமர் மோடியின் உதவியும், ஆசியும் தேவைப்படுகிறது.


பாராட்டுகிறேன்யாரையும் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்த மாட்டேன். காங்கிரசுக்கு ஓட்டளித்தவர் கள், பா.ஜ.,வுக்கு ஓட்டளித்தவர்கள் என்ற ரீதியில், பாகுபாடு எதுவும் காட்டப்படாது. எல்லா கட்சியினர், மதத்தினரின் வளர்ச்சிக்காகவும் ஆம் ஆத்மி அரசு பாடுபடும். டில்லியில் உள்ள இரண்டு கோடி மக்களும் என் குடும்பத்தினரே. டில்லியின் வளர்ச்சிக்காக, கடந்த ஐந்தாண்டுகளாக பல திட்டங்களை செயல்படுத்தினோம்; அந்த திட்டங்களை, தொடர்ந்து செயல்படுத்துவோம்.

நாட்டின் அரசியலையே மாற்றி அமைத்த டில்லி மக்களை பாராட்டுகிறேன். இந்த வெற்றி, சர்வதேச நாடுகளிலும் எதிரொலித்துஉள்ளது. அரசியல்வாதிகள் வரலாம்; போகலாம். ஆனால், டில்லி மக்கள் தான், இந்த நிர்வாகத்தை தொடர்ந்து நடத்தப் போகின்றனர்.


வெட்கக்கேடுபெண்களுக்கும், மாணவர்களுக்கும் இலவசங்களை வாரி வழங்கி, கெஜ்ரிவால், ஆட்சியை பிடித்து விட்டதாக, சிலர் விமர்சிக்கின்றனர். அவர்களுக்கு ஒரு விஷயத்தை கூற விரும்புகிறேன். இயற்கையும், கடவுளும், இந்த உலகத்தில் எல்லாவற்றையுமே, நமக்கு இலவசமாகத் தான் கொடுக்கின்றன.

குழந்தையிடம் தாய் காட்டும் அன்பு இலவசம் தான். ஒரு ஏழை தந்தை, குழந்தை சாப்பிடுவதற்காக, தன் உணவை தியாகம் செய்கிறார்; அந்த தியாகமும் இலவசம் தான். அது போலவே, இந்த கெஜ்ரிவாலும், டில்லி மக்களை மிகவும் நேசிக்கிறேன். இந்த நேசமும் இலவசம் தான். இதற்கு, நீங்கள் எந்த விலையையும் நிர்ணயிக்க முடியாது. அரசு பள்ளி மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்க முடியுமா; சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளுக்கு வரும் ஏழைகளிடம் கட்டணம் வசூலிக்க முடியுமா... சில மாநிலங்களில் இவ்வாறு நடக்கலாம். நான் அப்படி செய்தால், அது வெட்கக்கேடான விஷயமாக இருக்கும். இவ்வாறு, அவர் பேசினார்.


விழாவில், 'லிட்டில் மப்ளர்மேன்'சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டபோது, ஆம் ஆத்மி கட்சி முன்னணியில் இருக்கும் செய்தி வெளியானதுமே, டில்லியில் உள்ள அந்த கட்சியின் அலுவலகம் முன், ஏராளமான தொண்டர்கள் கூடினர். ஆம் ஆத்மி நிர்வாகி ஒருவர், தன் ஒன்றரை வயது ஆண் குழந்தை, அவ்யன் தோமருடன் வந்திருந்தார். அந்த குழந்தைக்கு, கெஜ்ரிவால் போலவே மப்ளர், தொப்பி, உடை அணிவித்து அழைத்து வந்திருந்தார்.

கெஜ்ரிவால் போல, அந்த குழந்தைக்கு மீசையும் வைக்கப்பட்டுஇருந்தது; இந்த குழந்தை, அங்கு வந்திருந்த அனைவரையும் கவர்ந்தது. இந்நிலையில், நேற்று நடந்த பதவி யேற்பு விழாவுக்கு, அந்த குழந்தைக்கு சிறப்பு அழைப்பாளராக அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, கெஜ்ரிவால் போலவே உடையணிந்த அந்த குழந்தை, நேற்றைய விழாவிலும் பங்கேற்றது. அந்த குழந்தையுடன், ஆம் ஆத்மி கட்சியினர், 'செல்பி' எடுத்து மகிழ்ந்தனர்.இது தவிர, மேலும் பல குழந்தைகளை, கெஜ்ரிவால் போலவே உடையணிவித்து, அவர்களது பெற்றோர் அழைத்து வந்திருந்தனர்.


பெண்களுக்கு வாய்ப்பில்லைடில்லி முதல்வராக அரவிந்த் கெஜ்ரி வால் பதவியேற்றதும், அமைச்சர்களும் பதவியேற்றனர். மணீஷ் சிசோடியா, சத்தியேந்திர ஜெயின், கோபால் ராய், கைலாஷ் கெலாட், இம்ரான் உசேன் மற்றும் ராஜேந்திர பால் கவுதம் ஆகிய ஆறு பேர், அமைச்சர்களாக பதவியேற்றனர்.ஆம் ஆத்மி கட்சியின், 62 எம்.எல்.ஏ.,க்களில், எட்டு பேர் பெண்கள். ஆனாலும், அமைச்சரவையில், பெண்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.


50 சிறப்பு விருந்தினர்பதவியேற்பு


விழாவில், டில்லியைச் சேர்ந்த, 50 பேர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். ஆசிரியர், அங்கன்வாடி பணியாளர், சுகாதார ஊழியர், ஆட்டோ டிரைவர், பஸ் டிரைவர், தொழிலாளர்கள், தேர்வுகளில் முதலிடம் பிடித்தோர் என, பல்வேறு தரப்பினர் இதில் இடம் பெற்றிருந்தனர். இவர்கள் மேடையில் அமர வைக்கப்பட்டிருந்தனர். 'டில்லியை உருவாக்கிவர்கள்' என்ற அடைமொழியுடன், இவர்கள் கவுரவிக்கப்பட்டனர்.

பதவியேற்றதும், 'பாரத் மாதா கி ஜே; இன்குலாப் ஜிந்தாபாத்' என்ற முழக்கத்துடன், கெஜ்ரிவால் தன் உரையை துவங்கினார். பதவியேற்பு விழாவில் பங்கேற்க, பிரதமர் மோடிக்கும், டில்லியைச் சேர்ந்த, பா.ஜ., - எம்.பி.,க்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், அவர்கள் பங்கேற்க வில்லை. இவர்களை தவிர, வேறு எந்த அரசியல் கட்சி தலைவர்களுக்கும், விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்படவில்லை.

Advertisement
வாசகர் கருத்து (1+ 47)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
blocked user - blocked,மயோட்
17-பிப்-202006:46:10 IST Report Abuse
blocked user ஷீலா தீட்சித் ஊழல் பற்றி பல்லாயிரம் பக்க ஆதாரம் எல்லாம் கல்லரைக்கு போய்விட்டது. புதிதாக ஊழல்கள் கல்லரைக்கு போகாமல் இருக்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X