அரசியல் செய்தி

தமிழ்நாடு

மீண்டும் பிளக்ஸ் பேனர்:உறுதி மொழியை மறந்த 'உடன்பிறப்புகள்'

Updated : பிப் 18, 2020 | Added : பிப் 16, 2020 | கருத்துகள் (27)
Share
Advertisement

கரூர்:உயர் நீதிமன்றத்தில் அளித்த பிரமாண பத்திர உறுதிமொழியை காற்றில் பறக்கவிட்டு, கரூரில் மீண்டும் பிளக்ஸ் பேனர் கலாசாரத்தை, தி.மு.க.,வினர் துவங்கியுள்ளனர்.



latest tamil news



சென்னையில், கடந்த ஆண்டு, பிளக்ஸ் பேனர் விழுந்து, இளம்பெண் சுபஸ்ரீ பலியானார். இதையடுத்து, 'பொது இடங்களில், பிளக்ஸ் பேனர் வைக்க மாட்டோம்' என உறுதிமொழி வழங்கி, பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய, அரசியல் கட்சியினருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. பிரமாண பத்திரம்இதையேற்று, தி.மு.க., - அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள், பிரமாண பத்திரம் தாக்கல் செய்தன.

இந்நிலையில், கரூர் பஸ் ஸ்டாண்ட் மனோகரா கார்னர், கோவை மற்றும் திண்டுக்கல் சாலை உட்பட பல்வேறு இடங்களில், சமீபகாலமாக, அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., உட்பட பல்வேறு கட்சிகளின் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்படுகின்றன.


latest tamil news



சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:சென்னை சுபஸ்ரீ மரணத்தை தொடர்ந்து, கரூர் நகரில் அனைத்து பிளக்ஸ் பேனர்களும் அகற்றப்பட்டன. கலாசாரம்அரசு, தனியார் இடங்களில் பிளக்ஸ் வைத்தால், 5,000 ரூபாய் அபராதம் அல்லது ஓராண்டு சிறை தண்டனை என, கலெக்டர் அன்பழகன் அறிவித்தார். இந்நிலையில், ஆறு மாதங்களாக காணாமல் போயிருந்த பேனர் கலாசாரம், மீண்டும் துவங்கியுள்ளது.

மார்ச், 1ல், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, கரூர் கவுரிபுரத்தில், மாவட்ட, தி.மு.க., அலுவலகத்தை சுற்றியும், பொது இடங்களிலும் பிளக்ஸ் பேனர் வைத்துள்ளனர். 'பேனர், கட் அவுட் வைக்க வேண்டாம்' என, தொண்டர்களுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.அதையும் மீறி, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தையும் மறந்து, தி.மு.க.,வினர் பேனர்கள் வைத்துள்ளனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

நகராட்சி ஆணையர் சுதாவிடம் கேட்டபோது, ''உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, பிளக்ஸ் பேனர் வைக்க, யாருக்கும் அனுமதியில்லை; கலெக்டரிடம் தான் அனுமதி பெற வேண்டும்,'' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
krish - chennai,இந்தியா
17-பிப்-202019:58:02 IST Report Abuse
krish நாய் வாலை நிமிர்த்த முயற்சிப்பது விவேகம் அல்ல. தமிழர் பிளெக்ஸ்போர்டு பண்பாட்டை, சீர்குலைக்க நினைக்கும் வந்தேறிகளின் முயற்சி பலிக்காது. எச்சரிக்கை உங்கள் வீண் முயற்சி, விழலுக்கு இறைத்த நீர் ஆகும்.
Rate this:
Share this comment
Cancel
Idithangi - SIngapore,சிங்கப்பூர்
17-பிப்-202019:19:43 IST Report Abuse
Idithangi நீதிமன்ற பிரமண பத்திரமும் அதோகதி . முரோசொலி மூலபத்திரமும் அதோகதி... இதில் பெருமை வேறு பீற்றிக்கொண்டனர் 200 ரூபாய் உடன் பிறப்புகள். இந்தியாவிலே முதல் காட்சியாம் நீதி மன்றத்தில் பிரமணபத்திரம் கொடுத்ததில்.
Rate this:
Share this comment
Cancel
N.K - Hamburg,ஜெர்மனி
17-பிப்-202018:29:33 IST Report Abuse
N.K இந்த மாதிரி பண்ணுனா அப்புறம் கோர்ட் ஏதாவது சொல்லும். அப்புறம் செய்தி ஆகும். கொஞ்சம் நானும் இருக்கேன்னு காட்டிக்கலாம். சும்மா சொல்லக்கூடாது. பின்ரான்யா பிரஷாந்த் கிஷோர்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X