மீண்டும் பிளக்ஸ் பேனர்:உறுதி மொழியை மறந்த உடன்பிறப்புகள்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

மீண்டும் பிளக்ஸ் பேனர்:உறுதி மொழியை மறந்த 'உடன்பிறப்புகள்'

Updated : பிப் 18, 2020 | Added : பிப் 16, 2020 | கருத்துகள் (27)
Share

கரூர்:உயர் நீதிமன்றத்தில் அளித்த பிரமாண பத்திர உறுதிமொழியை காற்றில் பறக்கவிட்டு, கரூரில் மீண்டும் பிளக்ஸ் பேனர் கலாசாரத்தை, தி.மு.க.,வினர் துவங்கியுள்ளனர்.



latest tamil news



சென்னையில், கடந்த ஆண்டு, பிளக்ஸ் பேனர் விழுந்து, இளம்பெண் சுபஸ்ரீ பலியானார். இதையடுத்து, 'பொது இடங்களில், பிளக்ஸ் பேனர் வைக்க மாட்டோம்' என உறுதிமொழி வழங்கி, பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய, அரசியல் கட்சியினருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. பிரமாண பத்திரம்இதையேற்று, தி.மு.க., - அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள், பிரமாண பத்திரம் தாக்கல் செய்தன.

இந்நிலையில், கரூர் பஸ் ஸ்டாண்ட் மனோகரா கார்னர், கோவை மற்றும் திண்டுக்கல் சாலை உட்பட பல்வேறு இடங்களில், சமீபகாலமாக, அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., உட்பட பல்வேறு கட்சிகளின் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்படுகின்றன.


latest tamil news



சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:சென்னை சுபஸ்ரீ மரணத்தை தொடர்ந்து, கரூர் நகரில் அனைத்து பிளக்ஸ் பேனர்களும் அகற்றப்பட்டன. கலாசாரம்அரசு, தனியார் இடங்களில் பிளக்ஸ் வைத்தால், 5,000 ரூபாய் அபராதம் அல்லது ஓராண்டு சிறை தண்டனை என, கலெக்டர் அன்பழகன் அறிவித்தார். இந்நிலையில், ஆறு மாதங்களாக காணாமல் போயிருந்த பேனர் கலாசாரம், மீண்டும் துவங்கியுள்ளது.

மார்ச், 1ல், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, கரூர் கவுரிபுரத்தில், மாவட்ட, தி.மு.க., அலுவலகத்தை சுற்றியும், பொது இடங்களிலும் பிளக்ஸ் பேனர் வைத்துள்ளனர். 'பேனர், கட் அவுட் வைக்க வேண்டாம்' என, தொண்டர்களுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.அதையும் மீறி, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தையும் மறந்து, தி.மு.க.,வினர் பேனர்கள் வைத்துள்ளனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

நகராட்சி ஆணையர் சுதாவிடம் கேட்டபோது, ''உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, பிளக்ஸ் பேனர் வைக்க, யாருக்கும் அனுமதியில்லை; கலெக்டரிடம் தான் அனுமதி பெற வேண்டும்,'' என்றார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X