பொது செய்தி

இந்தியா

உறுதி!குடியுரிமை திருத்த சட்டத்தில் மாற்றமில்லை:பின்வாங்க முடியாது என மோடி திட்டவட்டம்

Updated : பிப் 18, 2020 | Added : பிப் 16, 2020 | கருத்துகள் (43)
Share
Advertisement
வாரணாசி:-''ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய, 370வது சட்டப்பிரிவை ரத்து செய்வது, குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்வது போன்றவை, பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வந்தன. நாடு மற்றும் மக்கள் நலன் கருதி, இந்த முடிவுகளை, மத்திய அரசு எடுத்துள்ளது. இந்த முடிவுகளை திரும்ப பெறுவது என்ற பேச்சுக்கே இடமில்லை. யாருடைய நிர்ப்பந்தங்களுக்கும், மத்திய அரசு
வாரணாசி, மோடி, மேக் இன் இந்தியா, அடிக்கல், எக்ஸ்பிரஸ் சேவை, உஜ்ஜைனி , ராமர் கோவில்

வாரணாசி:-''ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய, 370வது சட்டப்பிரிவை ரத்து செய்வது, குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்வது போன்றவை, பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வந்தன. நாடு மற்றும் மக்கள் நலன் கருதி, இந்த முடிவுகளை, மத்திய அரசு எடுத்துள்ளது. இந்த முடிவுகளை திரும்ப பெறுவது என்ற பேச்சுக்கே இடமில்லை. யாருடைய நிர்ப்பந்தங்களுக்கும், மத்திய அரசு அடிபணியாது,'' என, பிரதமர் நரேந்திர மோடி, திட்டவட்டமாகதெரிவித்துள்ளார்.

உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள வாரணாசி தொகுதியின் எம்.பி.,யாக, பிரதமர் நரேந்திர மோடி உள்ளார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, வாரணாசி தொகுதிக்கு, பிரதமர் மோடி நேற்று வந்தார். வாரணாசியில், அவரை, உத்தர பிரதேச கவர்னர் ஆனந்தி பென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத், கர்நாடகா முதல்வர் எடியூரப்பா உட்பட பலர் வரவேற்றனர்.

பின், ஸ்ரீ ஜகத்குரு விஸ்வர்தியா குருகுலத்தின் நுாற்றாண்டு நிகழ்ச்சியில் பங்கேற்று, 19 மொழிகளில் ஸ்ரீ சித்தாந்த சிகாமணி கிரந்தத்தையும், மொபைல் செயலியையும் பிரதமர் வெளியிட்டார்.தொடர்ந்து, வாரணாசி தொகுதியில், 1,254 கோடி ரூபாய் மதிப்பில், 50 வளர்ச்சி திட்டங்களை, துவக்கி வைத்து, பிரதமர் மோடி அடிக்கல்நாட்டினார். மூன்று ஜோதிர்லிங்க ஸ்தலங்களை இணைக்கும் வகையில், ஐ.ஆர்.சி.டி.சி., எனப்படும், இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் சார்பில் இயக்கப்படும், 'காசி - மஹாகாள்' எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை, பிரதமர் மோடி, 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம் துவக்கி வைத்தார்.


63 அடி உயர சிலை

இதன்பின், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் சிந்தனையாளரும், பா.ஜ.,வின் முந்தைய அமைப்பான ஜனசங்கத்தின் தலைவருமாக இருந்த, பண்டிட் தீன் தயாள் உபாத்யாயாவின், 63 அடி உயர சிலையை, மோடி திறந்து வைத்தார்.இந்த வளாகத்தில், கைவினை பொருட்கள் கண்காட்சியையும், பிரதமர் திறந்து வைத்தார்.இந்நிகழ்ச்சிகளில், பிரதமர் மோடி பேசியதாவது:

இந்திய நாட்டை யாரும் உருவாக்கவில்லை. அதிகாரத்தாலும் உருவாக்கப்படவில்லை. கலாசாரத்தால் உருவாக்கப்பட்ட தேசம் இது. அதிலும், கலாசாரத்தில் பின்னி பிணைந்த மக்களால், உருவாக்கப்பட்ட தேசம் இது. அதனால் தான், நாட்டின் ஒவ்வொரு பகுதியையும் அடையாளப்படுத்தும் வகையில், சிறந்த கலைகள், ஓவியங்கள், பொருட்கள் உள்ளன.

இந்தியா முழுவதும் உள்ள சிறந்த கலைகள், ஓவியங்கள், பொருட்களை, ஒரே இடத்தில் பார்க்கும் வகையில், கண்காட்சி துவக்கப்பட்டுள்ளது. கைவினைப்பொருட்களில், நாம் பல ஆயிரம் ஆண்டுகளாகவே, சிறந்து விளங்கி வந்துள்ளோம், நமது வர்த்தகர்கள், நம் நாட்டின் தயாரிப்புகளை, உலகம் முழுவதும்பிரபலப்படுத்தியுள்ளனர். நம்மிடம் திறமைக்கு பஞ்சமில்லை. வளத்துக்கும் குறைவில்லை.

ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டிய எண்ணம் தான், நம்மிடம் குறைவாக உள்ளது. 130 கோடி மக்களும், ஒருங்கிணைந்து பணியாற்றினால், உலகின் குருவாக பாரதம் மாறும். இலவச சமையல் எரிவாயு இணைப்பு, கழிப்பறைகள் போன்ற எங்களது திட்டங்கள், ஏழைகளிடம் கொண்டு சேர்க்கப்பட்டு உள்ளது.

வாரணாசியில், கடந்த ஐந்து ஆண்டுகளில், 25 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள், முழுவதுமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு காரணம், உங்களுக்கு சேவையாற்ற, என்னை, சிவபெருமான் ஆசிர்வதித்தது தான். மருத்துவமனை, பள்ளி, சாலைகள், பாலங்கள், குடிநீர் தொடர்பாக, 1,244 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள், இப்போது துவக்கப்பட்டுள்ளன.


ஊக்க சக்தி

நாட்டின் மிகப் பெரும் சிந்தனைவாதியாக மதிக்கப்பட்ட, தீன்தயாள் உபாத்யாயாவின், 63 அடி உயர சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த பெரிய சிலை, இனி வரும் தலைமுறையின ரையும் ஈர்க்கும். அவரின்எண்ணங்கள் மற்றும் கொள்கைகள், அனைவரையும் கவரும். தீன்தயாளின் ஆன்மா, எங்களுக்கு எப்போதும் ஊக்க சக்தியாக இருந்து வருகிறது. வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த, அவர் காட்டிய வழியில், நாங்கள் பலநடவடிக்கைகள் எடுத்து உள்ளோம்.

நாட்டின் ஒரு குறிப்பிட்ட பகுதி என்றில்லாமல், அனைத்து பகுதிகளிலும், வளர்ச்சியை அதிகரித்துள்ளோம். நாடு முழுவதும், 100 மாவட்டங்களில், முன் எப்போதும் இல்லாத அளவில், வளர்ச்சி பணிகள் நடந்து வருகின்றன.


ஒத்துழைப்புஇன்று நாம், 350 லட்சம் கோடி ரூபாய் பொருளாதார வளர்ச்சி பற்றி பேசுகிறோம். அதில் சுற்றுலாத் துறை, மிக முக்கிய பங்கு வகிக்கும் என்பதில் சந்தேகமில்லை.இந்த இலக்கை அடைவதில், இயற்கையை தாண்டி, பாரம்பரியசுற்றுலாவும் முக்கிய பங்கு வகிக்கும். வாரணாசியுடன் இணைந்து, நாட்டில் உள்ள புனித ஸ்தலங்கள், நவீன தொழில்நுட்ப உதவியுடன் மேம்படுத்தப்படும்.

நாட்டின் வளர்ச்சி திட்டங்களை, அரசு மட்டுமே செயல்படுத்த முடியாது. இதில், மக்கள் பங்கு, ஒத்துழைப்பு மிகவும் முக்கியம். கங்கை நதி துாய்மை திட்டத்தில், கடந்த ஐந்து ஆண்டுகளில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதற்கு, பொது மக்கள் அளித்த ஒத்துழைப்பு தான் பெரிதும் காரணம். 'நமாமி கங்கை' திட்டத்தின் கீழ், 7 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன.

நாட்டின் எதிர்காலத்தை, மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்; அரசுகள் அல்ல என்பதில், நாங்கள் உறுதியாக உள்ளோம். துாய்மை இந்தியா திட்டம் பெற்ற வெற்றிக்கு, மக்கள் தான் காரணம்; அரசு அல்ல.


ஜல் ஜீவன்உலகின் உற்பத்தி மையமாக இந்தியாவை மாற்றவே, 'மேக் இன் இந்தியா' திட்டம் அமல் படுத்தப்பட்டுள்ளது.சிறிய பொருட்கள் முதல் பெரிய பொருட்கள் வரை, இந்திய தயாரிப்புகளை வாங்கி பயன்படுத்துவதை, நாம் லட்சியமாக கொள்ள வேண்டும். அனைத்து வீடுகளுக்கும், ஐந்தாண்டுகளில் குடிநீர் வழங்குவதற்காக, 'ஜல் ஜீவன்' திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தை செயல்படுத்துவதில், நிதி ஒதுக்கீடு ஒரு பிரச்னையாக இருக்காது; அரசின் உத்வேகமும் பலவீனமாகாது.

ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டு வந்த, 370வது சட்டப்பிரிவை ரத்து செய்ய வேண்டும் என்பது, மக்களின், 50 ஆண்டு கால கோரிக்கை. அதேபோல்,பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில், மதரீதியாக பாதிக்கப்பட்டு, இந்தியாவுக்கு அகதிகளாக வந்துள்ளவர்களுக்கு, குடியுரிமை வழங்க வேண்டும் என்பதும், நீண்ட நாளைய கோரிக்கை. ஆனால், இவற்றை நிறைவேற்றாமல், முந்தைய அரசுகள், கிடப்பில் போட்டு வந்தன. தேச நலனை கருத்தில் கொண்டு, நாங்கள் இவற்றை கையிலெடுத்தோம்.

இப்போது, ஜம்மு - காஷ்மீரில், 370வது சட்டப் பிரிவு, ரத்து செய்யப்பட்டு விட்டது.குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இவ்விவகாரங்களில், நாங்கள் உறுதியாகவும் இருப்போம். நீண்டகாலமாக, இந்த வரலாற்று முடிவுக்காக, நாடு காத்திருந்தது.

நாட்டின் நலனுக்கு, இந்த முடிவுகள் மிகவும் அவசியமானவை.அனைத்து தரப்பிலிருந்தும் அழுத்தங்கள் வந்தாலும், எங்கள் முடிவிலிருந்து பின்வாங்க மாட்டோம். எந்த நிர்ப்பந்தத்துக்கும், அடிபணியமாட்டோம். குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறுவது, 370வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டதை ரத்து செய்வது என்ற பேச்சுக்கே இடமில்லை. இது தொடர்பாக, எந்த சவால்களையும் சந்திக்க, நாங்கள் தயாராக உள்ளோம்.இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.


67 ஏக்கர் நிலம் ஒப்படைக்கப்படும்அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது பற்றி பிரதமர் மோடி கூறியதாவது: அயோத்தியில், ராமபிரான் பிறந்த இடத்தில், பிரமாண்ட கோவில் கட்ட வேண்டும் என்பது, 100 கோடிக்கும் அதிகமான மக்களின் கனவு, ஆசை. பல ஆண்டுகளாக இந்தப் பிரச்னை, நீதிமன்றத்தில் இருந்தது.

இப்போது, அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு, உச்ச நீதிமன்ற தீர்ப்பு வழி வகுத்துள்ளது. ராமர் கோவில் கட்டுவதற்காக, 'ஸ்ரீ ராமஜன்மபூமி தீர்த்த ஷேத்ரா' என்ற அறக்கட்டளையை, அரசு அமைத்துள்ளது. இந்த அறக்கட்டளை, ராமர் கோவில் கட்டும் பணியைத் தீவிரமாக, வேகமாகச் செயல்படுத்தும்.

ராமர் கோவில் கட்டுவது தொடர்பாக, மற்றொரு முக்கியமான முடிவை, அரசு எடுத்துள்ளது. அயோத்தி சட்டத்தின் கீழ் கையகப்படுத்தப்பட்ட, 67 ஏக்கர் நிலத்தையும், அறக்கட்டளையிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலத்தில், பிரமாண்டமான ராமர் கோவில், விரைவில் கட்டப்படும். இவ்வாறு, பிரதமர் கூறினார்.


3 ஜோதிர்லிங்க தரிசனம்பிரதமர் நேற்று துவக்கி வைத்த, 'காசி - மஹாகாள்' எக்ஸ்பிரஸ் ரயிலை, ஐ.ஆர்.சி.டி.சி. இயக்குகிறது. நாட்டில், தனியார் மூலம் இயக்கப்படும், மூன்றாவது ரயில் சேவை இது.நாட்டில், 12 ஜோதிர்லிங்க ஸ்தலங்கள் உள்ளன. அதில் காசி விஸ்வநாதர் கோவில், மத்திய பிரதேச மாநிலம், உஜ்ஜைனியில் உள்ள, மஹா காளேஸ்வர் கோவில், இந்துாரில் உள்ள, ஓம்காரேஸ்வர் கோவில் ஆகியவையும் அடங்கும்.

இந்த மூன்று ஜோதிர்லிங்க ஸ்தலங்களை தரிசிக்கும் வகையில், இந்த ரயில் சேவை துவக்கப்பட்டுள்ளது. இது பற்றி பிரதமர் பேசுகையில், ''காசியில் விஸ்வநாதரை தரிசித்த பின், உஜ்ஜைனி சென்று மஹா காளேஸ்வரையும், இந்துார் சென்று, ஓம்காரேஸ்வரையும் தரிசிக்கலாம்,'' என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (43)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kumar periyaar - Chennai,இந்தியா
18-பிப்-202018:58:28 IST Report Abuse
Kumar periyaar பிறகு கீழ் ஜாதி மக்களை இதில் செப்போம் என்று இப்பொழுதே கூறே வேண்டியது தானே
Rate this:
Cancel
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
17-பிப்-202023:42:32 IST Report Abuse
Rajagopal வாரணாசியில் விசுவநாதர் கோயிலை அவுரங்கஜேப் இடித்து மசூதியைக் கட்டி வைத்திருக்கிறான். அதை மீட்டு, கோயிலை மீண்டும் புதுப்பிக்க வேண்டும்.
Rate this:
Cancel
கேள்விக்கென்ன பதில் - Thiruvaiyaru,இந்தியா
17-பிப்-202022:30:27 IST Report Abuse
கேள்விக்கென்ன பதில் சட்டத்தை பின்வாங்கும் வரை போராடுவோம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X