அரசியல் செய்தி

தமிழ்நாடு

தேர்வு முறை மாற்றம் ராமதாஸ் வரவேற்பு

Added : பிப் 16, 2020
Share
Advertisement

சென்னை:'தேர்வு முறைகேடுகளைத் தடுக்க, டி.என்.பி.எஸ்.சி., மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கவை' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
'டுவிட்டர்' சமூக வலைதளத்தில், ராமதாஸ் கூறியிருப்பதாவது:தேர்வு முறைகேடுகளைத் தடுக்க, டி.என்.பி.எஸ்.சி., மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கவை. அதே நேரத்தில், 'குரூப் - 4' பணிகளுக்கு, முதல் நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு என, இரு தேர்வுகளை நடத்துவது நியாயமற்றது; இந்த முடிவை மாற்ற வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
அறிக்கையில் ராமதாஸ் கூறியிருப்பதாவது:தமிழ்நாடு அரசு பள்ளிகளுக்கு, முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதில், வேதியியல், தமிழ், பொருளியல், வரலாறு உள்ளிட்ட, ஏழு பாடங்களுக்கான தரவரிசைப் பட்டியல் தயாரிப்பில், இட ஒதுக்கீட்டு விதிகள் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளன. இதை, சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ள நிலையில், அந்த விதிமீறல்களை சரி செய்து, சமூக நீதி பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யாமல், அவசர அவசரமாக நியமன ஆணைகளை, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வழங்கியிருப்பது கண்டிக்கத்தக்கது.ஆசிரியர் தேர்வு வாரியம், சமூக நீதிக்கு எதிரான போக்கை கைவிட்டு, பாதிக்கப்பட்ட மிகவும் பிறப்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு, நீதி வழங்க முன் வர வேண்டும். இந்த விஷயத்தில், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் மற்றும் அதிகாரிகளுக்கு உரிய வழிகாட்டுதலை, தமிழக அரசு வழங்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X