அரசியல் செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நிறைவு

Added : பிப் 16, 2020
Share
Advertisement

சென்னை:அ.தி.மு.க., தலைமையகத்தில் நடந்து வந்த, மாவட்ட வாரியான நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், நேற்று நிறைவடைந்தது.
நேற்றைய கூட்டம் துவங்கும் முன், முதல்வர் இ.பி.எஸ்., பதவியேற்றதன், நான்காம் ஆண்டு துவக்கத்தையொட்டி, தொண்டர்கள் லட்டு வழங்கி கொண்டாடினர்.கட்சியின் வளர்ச்சி மற்றும் தேர்தல் பணிகள் குறித்து, சென்னை, ராயப்பேட்டையில் உள்ள, அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், மாவட்ட வாரியாக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டம், இம்மாதம், 10ம் தேதி துவங்கியது.வெற்றி வியூகம்கூட்டத்தில், ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான இ.பி.எஸ்., - துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, அமைப்பு செயலர் வைத்திலிங்கம், விஸ்வநாதன், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி ஆகியோர் பங்கேற்றனர்.கூட்டத்தில் பங்கேற்ற மாவட்ட நிர்வாகிகள், கட்சியில் நிலவும் உட்கட்சி பிரச்னைகள், ஊரக உள்ளாட்சி தேர்தலில், அ.தி.மு.க.,வின் தோல்விக்கான காரணங்கள், நகர்ப்புறஉள்ளாட்சி தேர்தல் வெற்றி வியூகம் குறித்த கருத்துகளைத் தெரிவித்தனர்.
இம்மாதம், 14ம் தேதி, சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதால், 12, 13ம் தேதிகளில் நடைபெற இருந்த, மாவட்ட நிர்வாகிகள் உடனான ஆலோசனை கூட்டம் தள்ளி வைக்கப்பட்டது. அவ்வாறு தள்ளி வைக்கப்பட்ட கூட்டம் நேற்று நடந்தது.காலையில், தேனி, கோவை மாநகர், கோவை புறநகர், அரியலுார், தர்ம புரி, திருப்பூர் மாநகர், திருப்பூர் புறநகர் ஆகிய மாவட்டங்களின் நிர்வாகிகள் உடனும், மாலையில், சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, ஈரோடு மாவட்ட நிர்வாகிகளுடனும், கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசனை நடந்தது. நேற்றுடன் சேர்த்து, நான்கு நாட்கள் நடந்த ஆலோசனை கூட்டத்தில், உட்கட்சி பூசல் தொடர்பான புகார்களையே அதிகமாக, நிர்வாகிகள் தெரிவித்தனர். 'நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு முன், அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காணப்படும்' என, ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ்., ஆகியோர் தெரிவித்தனர்.
மாவட்ட நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் நேற்றுடன் நிறைவடைந்தது.இனிப்பு வினியோகம் முதல்வராக இ.பி.எஸ்., பொறுப்பேற்று, மூன்றாண்டு நிறைவடைந்து, நேற்று நான்காவது ஆண்டு துவங்கியது. இதையொட்டி, அ.தி.மு.க., தலைமை அலுவலகத்திற்கு, தொண்டர்கள் அதிகம் பேர் வந்தனர். அவர்கள், இனிப்பு கொடுத்து கொண்டாடினர். முதல்வர் இ.பி.எஸ்., - துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோருக்கு, தொண்டர்கள் இனிப்பு வழங்கியும், பூங்கொத்து கொடுத்தும், தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X