சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'குரூப்- 4' வினாத்தாள், 'லீக்' பல கோணங்களில் விசாரணை

Updated : பிப் 18, 2020 | Added : பிப் 16, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
 'குரூப் 4' வினாத்தாள்,, 'லீக்', பல கோணங்களில்,விசாரணை

சென்னை:'குரூப் - 4' தேர்விற்கான விடைகளை தயாரிக்கும் வகையில், வினாத்தாள் முன்கூட்டியே, 'லீக்' ஆனது குறித்து, டி.என்.பி.எஸ்.சி., அதிகாரிகளும், போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள, 9,000க்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., சார்பில், 'குரூப் - 4' தேர்வு, 2019 செப்டம்பரில் நடந்தது. இதன் முடிவுகள் நவம்பரில் வெளியாகின. தேர்வு முடிவுகளில், முன்னிலை பெற்றவர்கள் பலர், முறைகேட்டில் ஈடுபட்டதால், தேர்ச்சி பெற்றது அம்பலமானது.

இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி., தரப்பில், சி.பி.சி.ஐ.டி., போலீசில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. குரூப் - 4 தேர்வு மட்டுமின்றி, குரூப் - 2 ஏ மற்றும், வி.ஏ.ஓ., தேர்விலும், முறைகேடுகள் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மோசடிகள் தொடர்பாக, ௪௦க்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

தேர்வு முறைகேட்டில் விடைத்தாளை திருத்துவதற்கு உதவிய, ஆசிரியர் செல்வேந்திரன், நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளார். அவரை போலீஸ் காவலில் எடுத்துவிசாரிக்க, சி.பி.சி.ஐ.டி., திட்டமிட்டுள்ளது. இந்த செல்வேந்திரன் தான், சரியான விடைகளை எழுதி, இடைத்தரகர் ஜெயகுமாருக்கு வழங்கியுள்ளார். அதன் அடிப்படையில் தான், விடைத் தாள்களில், ஜெயகுமார் விடைகளை மாற்றி எழுதியுள்ளார். சிறையில் அடைக்கப்பட்டு உள்ள செல்வேந்திரன், டி.என்.பி.எஸ்.சி.,யின் சில தேர்வு மையங்களில் பணியாற்றியது தெரியவந்துள்ளது.

அந்த மையங்களில் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்கள் குறித்தும், போலீசாரும், டி.என்.பி.எஸ்.சி., அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர். தேர்வுக்கான சரியான விடையை தயார் செய்ய ஏதுவாக, ஆசிரியர் செல்வேந்திரனுக்கு, தேர்வு நடக்கும் முன், வினாத்தாள் கிடைத்துள்ளது.குரூப் - 4 தேர்வு நடந்த நாளன்று, தேர்வு முடிந்து, தேர்வு மையங்களில் இருந்து, தேர்வர்கள் வெளியே வரும் முன், தேர்வுக்கான முழு விடைக் குறிப்பும், செல்வேந்திரன் வாயிலாக, இடைத்தரகர் ஜெயகுமாருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி., மற்றும் போலீஸ் அதிகாரிகள் தரப்பில் விசாரணை துவங்கி உள்ளது. வினாத்தாள் லீக் ஆனது எப்படி என்றும், வினாத்தாள் திருடப்பட்டதில் யார் யாருக்கு தொடர்பு உள்ளது என்றும், போலீசாரும், டி.என்.பி.எஸ்.சி., அதிகாரிகளும், விசாரணை நடத்தி வருகின்றனர்.

வினாத்தாளை தயாரித்தவர்களே, லீக் செய்தனரா; வினாத்தாள் இறுதி செய்யப்பட்ட இடத்தில் லீக் ஆனதா; அச்சகத்திலிருந்து லீக் ஆனதா; தேர்வு மையத்தில் இருந்து திருடப்பட்டதா; வாகனத்தில் வினாத்தாளை எடுத்து செல்லும் போது திருடப்பட்டதா என, பல கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
நக்கீரன் - திருநெல்வேலி சீமை,இந்தியா
17-பிப்-202011:17:34 IST Report Abuse
நக்கீரன் இன்னும் பல வருசத்துக்கு விசாரிச்சிக்கிட்டே இருங்கடா...அதற்குள் முறைகேடு செய்தவர்கள் போய் சேர்ந்தே விடுவார்கள். இவ்வளவு பெரிய முறைகேட்டை இவ்வளவு தைரியமாக செய்கிறார்கள் என்றால் அவர்கள் இந்த சட்டங்களை எவ்வளவு கீழ்த்தரமாக நினைக்கிறார்கள் என்று தெரிந்துகொள்ளலாம். இந்த விசாரணைகள் எல்லாமே வெறும் கண்துடைப்புக்காக மட்டுமே. இதில் தொடர்புடைய அனைத்து அமைச்சர்களும் கைது செய்யப்பட்டால்தான் இனி நம்பிக்கை வரும்.
Rate this:
Srinivas - Chennai,இந்தியா
17-பிப்-202013:43:26 IST Report Abuse
Srinivasபாக்கி இருப்பது சில மாதங்களே....அதனால் அடிக்கமுடிந்தவரை அடித்துக்குவித்து விடவேண்டும் என்று அடிமைகள் மும்முரமாக இருப்பது தெரிகிறது. கொள்ளையடிக்காமல் எந்த துறையும் பாக்கி இருக்காது. மாநிலத்தின் மொத்த கடனும் 5 லட்சம் கோடிகள். விரைவில் திவாலாகும் அவலமும் வெளியில் வரலாம். இந்த கொள்ளையில் வெளியில் வருவது சிறு மீன்களின் பெயர்கள் மட்டுமே...அமைச்சக திமிங்கிலங்கள் பெயர் வெளியில் வராமல் விசாரணை நடக்கும். எல்லாம் மேலிருப்பவரின் கருணையே கருணை.......
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
17-பிப்-202010:00:07 IST Report Abuse
D.Ambujavalli முதலில் வினாத்தாள் செட் செய்பவர் வேலை முடிந்ததும் சோதனை செய்யப் பட்டும், தனித்தனியாகக் நாலைந்து பேரைக்கொண்டு மாற்று தாள்கள் தயாரித்தும் fool proof ஆக தயாரிப்பதுடன், முதலில் உள்ளே கீழ் இருந்து மேல்வரை இருக்கும் களைகளைக் களைந்து ஒழுங்கு படுத்தினால்தான் சரியாகும். அது முடியாதெனில், கமல் சொல்வதுபோல் தேர்வுகளையே நிறுத்தித் தொலைக்கலாம் மனு, போக்குவரவு செலவாவது மிஞ்சும்
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
17-பிப்-202008:34:44 IST Report Abuse
blocked user நெறியற்ற முறையில் பதவி பெற்றவர்களின் சம்பளத்தை முழுவதுமாக இவர்களிடம் வசூல் செய்தால் அடுத்த முறை இப்படி செய்ய பயப்படுவார்கள். 20 வருடமாவது வடநாட்டில் ஜெயிலில் போடவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X