அரசியல் செய்தி

தமிழ்நாடு

கீழடியில், 'அகழ் வைப்பகம்' வாசன் வரவேற்பு

Updated : பிப் 17, 2020 | Added : பிப் 16, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
 கீழடியில், 'அகழ் வைப்பகம்'  வாசன் வரவேற்பு

சென்னை:'கீழடியில் அகழ்வைப்பகம் அமைக்கும் பணியை, தமிழக அரசு உடனே துவங்க வேண்டும்' என, த.மா.கா., தலைவர் வாசன் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:அகழாய்வு நடந்த கீழடியில், தொல்லியல் பொருட்களை பாதுகாக்கும் வகையில், 'அகழ் வைப்பகம்' அமைக்க, தமிழக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப் பட்டுள்ளது. இந்த முயற்சி, தமிழினம், தமிழ்மொழி, தமிழ் இலக்கியங்களின் பெருமை மற்றும் புகழை நிலைநாட்டவும், பண்டைய தமிழக வரலாற்று சிறப்புகளை, உலகளவில் பரப்பவும் பயன்படும். தொல்லியல் ஆய்வுகளை மேற்கொள்வதற்கு ஏற்ற இடமாக, தமிழகம் இருப்பதால், தமிழக தொல்லியல் துறைக்கு, அதிக நிதி ஒதுக்க வேண்டும் என்பது, தமிழக மக்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில், தொல்லியல் துறைக்கு, 31.93 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, தமிழரின் பழமையை, தொன்மையை தெரிந்து கொள்ள முடியும்.இவ்வாறு வாசன் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
dandy - vienna,ஆஸ்திரியா
17-பிப்-202016:17:46 IST Report Abuse
dandy மறக்காமல் டாஸ்மாக் கடையும் திறக்கவும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X