உள்ளாட்சி தேர்தலுக்கு காஷ்மீர் கட்சிகள் தயார்

Updated : பிப் 18, 2020 | Added : பிப் 16, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
 உள்ளாட்சி தேர்தலுக்கு, காஷ்மீர், கட்சிகள், பிரசாரம், தயார்,  தேர்தல் ஆணையம்

ஜம்மு:ஜம்மு - -காஷ்மீர் மாநிலத்தின், ௩௭௦வது பிரிவு கடந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டு, ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் என, இரு யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்டது.

தற்போது உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை நடத்த, தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. ஜம்மு - காஷ்மீரில் உள்ள, ௧,௦௧௧ ஊராட்சிகள் மற்றும் ௧௧ ஆயிரத்து, ௬௩௯ பஞ்சாயத்துகளுக்கான தேர்தல், மார்ச், ௫ம் தேதி முதல், ௮ கட்டங்களாக, நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், தேசிய மாநாட்டு கட்சியின் மத்திய செயலர் ரத்தன் லால் குப்தா, தலைமை தேர்தல் கமிஷனர் மற்றும் ஜம்மு - காஷ்மீர் தலைமை தேர்தல் அலுவலர் ஷைலேந்திர குமார் ஆகியோருக்கு, தேர்தல் குறித்து கடிதம் எழுதியுள்ளார்.

கடிதத்தில் கூறப்பட்டு உள்ளதாவது:தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, துணை தலைவர் ஒமர் அப்துல்லா, பொது செயலர் அலி முகமது சாகர் ஆகியோர், பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், உள்ளாட்சி தேர்தலில்பங்கேற்பதில் பல்வேறு சிரமங்கள் உள்ளன.உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பாளர்கள் தேர்வு, பிரசாரம் போன்றவற்றில் தலைவர்கள் பங்கேற்க இயலாது. இருப்பினும், உள்ளாட்சி பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான மக்களின் ஜனநாயக உரிமைகளை, எங்கள் கட்சி முழுமையாக நம்புகிறது.

அரசியல் கட்சிகள், தங்கள் கொள்கைகளை தெரிவித்து, அதன் அடிப்படையில் பிரசாரம் மேற்கொண்டு, மக்கள் சுய சிந்தனையுடன் ஓட்டுகளை பதிவு செய்து, உள்ளாட்சி பிரதிநிதிகளை தேர்வு செய்ய வேண்டும். எனவே, பாதுகாப்பு காரணங்களை கூறி நடைமுறையில் உள்ள அரசியல் தடைகளை மீறி, எப்படி பிரசாரம் மேற்கொள்வது என, தேர்தல் ஆணையம் ஆலோசனை வழங்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RajanRajan - kerala,இந்தியா
17-பிப்-202016:57:58 IST Report Abuse
RajanRajan நல்ல ஒரு திருப்பம். அந்த உள்ளூர் தீவிரவாதிகளை வீட்டு காவலில் வைத்து இந்த தேர்தலை சுமுகமாக நடத்தி காஸ்மீர் மக்களுக்கு அமைதியான வாழ்க்கை அமைய வேண்டும். BE INDIAN AND NEVER BE A PAKISTAANI எனும் கோஷம் எங்கும் ஒலிக்க வேண்டும். பண்டிட்டுகள் மறுபடியும் குடியமர்த்த பட வேண்டும். வந்தே மாதரம்.
Rate this:
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
17-பிப்-202008:35:38 IST Report Abuse
ஆரூர் ரங் முக்கியமாக அங்கு முதன்முதலாக உள்ளாட்சிகளில் பெண்கள் தாழ்த்தப்பட்டோருக்கு இடவொதுக்கடத்தேயு வருகிறது .ஃபட்வாவுக்கு பயந்து காங்கிரஸ் அதனைக் கொண்டுவராமலிருந்து சுடலையின் காமெண்ட் தேவை
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
17-பிப்-202008:06:01 IST Report Abuse
blocked user காஷ்மீரை தீவிரவாத மாநிலமாக வைத்திருக்க முயலும் தலைவர்களை இந்தியாவில் இருக்கும் வரை சமாதானம் வராது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X