' ரெய்டு குறித்து தெ.தே.,பாய்ச்சல்: பொய் தகவல்களை பரப்புவதாக ஆவேசம்

Added : பிப் 16, 2020
Share
Advertisement

புதுடில்லி:ஆந்திராவில் சமீபத்தில் நடந்த வருமான வரிச் சோதனையில், 2,000 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு நடந்ததாக கூறப்பட்ட புகாரில், சந்திரபாபு நாயுடுக்கு தொடர்புள்ளதாக, ஆளும், ஒய்.எஸ்.ஆர்., - காங்., கட்சியினர் வதந்தி பரப்புவதாக, தெலுங்கு தேசம் கட்சி குற்றம் சாட்டி உள்ளது.
ஆந்திராவில், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான, ஒய்.எஸ்.ஆர்., - காங்., ஆட்சி நடக்கிறது.இங்கு, முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடுவின் முன்னாள் தனி உதவியாளர் ஸ்ரீனிவாஸ் வீடு மற்றும் அலுவலகங்களில், வருமான வரித்துறையினர் சமீபத்தில் சோதனை நடத்தினர். இதில், 2,000 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு நடந்ததாக வருமான வரித்துறை சார்பில் முதலில் தெரிவிக்கப்பட்டது. இந்த முறைகேட்டில், சந்திரபாபு நாயுடுவுக்கு தொடர்புள்ளதாக ஆளும் கட்சியினர் கூறி வந்தனர். இதற்கிடையே, ஸ்ரீனிவாஸின் வீட்டில் இருந்து, 2.63 லட்சம் ரூபாய் மட்டுமே கைப்பற்றப்பட்டதாகவும், அதற்கான ஆதாரங்கள் கொடுத்ததை அடுத்து, அந்த தொகையை, அவரிடமே திருப்பி அளித்து விட்டதாகவும் வருமான வரித்துறை சார்பில் ரசீது அளிக்கப்பட்டது. இந்த ரசீதை, தெலுங்கு தேசம் கட்சியினர் சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்; இந்த ரசீதை, பகிரங்கமாக வெளியிட்டது தவறு என, சர்ச்சை எழுந்தது. இந்நிலையில், தெலுங்கு தேசம் கட்சி யின், எம்.பி., ஜெய் கட்டலா கூறியதாவது:ஆந்திராவில் கடந்த ஐந்தாண்டுகளாக நடந்த தெலுங்கு தேசம் ஆட்சியில், ஊழல் நடந்ததற்கான எந்தவிதமான ஆதாரத்தையும், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியால் கண்டு பிடிக்க முடியவில்லை. இதனால், வருமான வரிச் சோதனை குறித்த விஷயத்தில், சந்திரபாபு நாயுடுவுக்கு தொடர்பு இருப்பதாக பொய் தகவல்களை பரப்பி வருகின்றனர். ஆந்திராவில் உள்ள குறிப்பிட்ட சில ஊடகங்களும், இது தொடர்பாக பொய் செய்திகளை வெளியிட்டு வருகின்றன. தற்போது ஆந்திராவில் அரசு துறைகளில் பல ஊழல்கள் நடக்கின்றன. இதிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக, இதுபோன்ற பொய் செய்திகளை பரப்பி வருகின்றனர். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X