சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பொள்ளாச்சி அருகே பைக் விபத்தில் மூவர் பலி

Added : பிப் 17, 2020
Share
Advertisement
ஆனைமலை;பொள்ளாச்சி அருகே, இரண்டு பைக்குகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில், மூவர் இறந்தனர் ஒருவர் படுகாயம் அடைந்தார். விபத்தில் சிக்கிய நான்கு பேரும், 'ஹெல்மெட்' அணியவில்லை.கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகேயுள்ள ஆனைமலை, கோட்டூரைச் சேர்ந்தவர் கார்த்தி, 23; பிளாஸ்டிக் கம்பெனி ஊழியர். அதே பகுதியைச் சேர்ந்தவர், ஆனந்தகுமார், 23; கூலித் தொழிலாளி.நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு,

ஆனைமலை;பொள்ளாச்சி அருகே, இரண்டு பைக்குகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில், மூவர் இறந்தனர் ஒருவர் படுகாயம் அடைந்தார்.
விபத்தில் சிக்கிய நான்கு பேரும், 'ஹெல்மெட்' அணியவில்லை.கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகேயுள்ள ஆனைமலை, கோட்டூரைச் சேர்ந்தவர் கார்த்தி, 23; பிளாஸ்டிக் கம்பெனி ஊழியர். அதே பகுதியைச் சேர்ந்தவர், ஆனந்தகுமார், 23; கூலித் தொழிலாளி.நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு, இருவரும், 'பேஷன் புரோ' பைக்கில், மீனாட்சிபுரத்தில் இருந்து கோட்டூர் சென்று கொண்டிருந்தனர்; ஆனந்தகுமார் ஓட்டினார்.வளந்தாயமரம் தனியார் மில் அருகே, எதிரே அதிவேகத்தில் வந்த, 'பஜாஜ்' பல்சர் பைக்குடன் மோதியது. அந்த பைக்கை, போடிபாளையத்தைச் சேர்ந்த அசோக்மணி, 18, ஓட்டி வந்தார். பின் இருக்கையில், அவரது நண்பர் கார்த்திகேயன், 17, இருந்தார்.இந்த விபத்தில், ஆனந்தகுமார், கார்த்திகேயன் சம்பவ இடத்திலேயே இறந்தனர். படுகாய மடைந்த அசோக்மணி, கோவை அரசு மருத்துவ மனையில் இறந்தார். கார்த்தி, ஆனைமலை தனியார் மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வருகிறார்.ஆனைமலை போலீசார் கூறுகையில், 'பைக்கில் சென்ற நால்வரும், 'ஹெல்மெட்' அணியாமல் பயணித்து உள்ளனர். ஹெல்மெட் அணிந்திருந்தால், உயிர் சேதம் தவிர்க்கப்பட்டிருக்கும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X