சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கணவரை கொல்ல முயற்சி ஆசிரியை, காதலர்கள் கைது

Added : பிப் 17, 2020 | கருத்துகள் (41)
Share
Advertisement
 கணவரை கொல்ல முயற்சி ஆசிரியை, காதலர்கள் கைது

தர்மபுரி;கள்ளக் காதலர்களுடன் சேர்ந்து, கணவரை கொல்ல முயன்ற, அரசுப் பள்ளி ஆசிரியை உட்பட மூன்று பேரை, போலீசார் கைது செய்தனர்.
தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த, மொட்டலுாரைச் சேர்ந்தவர், விவசாயி பொன்னுரங்கன், 47; மனைவி பிரியா, 42, காரிமங்கலம் மேல்நிலைப் பள்ளி ஆசிரியை. இவர்களது மகள், சென்னையில், எம்.பி.பி.எஸ்., இரண்டாமாண்டு படிக்கிறார். மகன், ஒன்பதாம் வகுப்பு படிக்கிறார்.பிரியாவுக்கு, பல ஆண்களுடன் தவறான தொடர்பு இருந்துள்ளது. இதை, பொன்னுரங்கன் கண்டித்தார். ஆனாலும், கள்ளத்தொடர்பை கைவிடாததால், அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், கணவரை கொல்ல, பிரியா முடிவு செய்துள்ளார்.நேற்று முன்தினம், வீட்டில் துாங்கி கொண்டிருந்த கணவரை, இரு வாலிபர்களுடன் சேர்ந்து, தலையணையால் முகத்தை அமுக்கி கொலை செய்ய முயன்றுள்ளார். சுதாரித்த கணவர் கூச்சல் போடவே, மூவரும், அவரை தாக்கி தப்பினர். காரிமங்கலம் போலீசில், பொன்னுரங்கன் புகார் அளித்தார்.
போலீசாரிடம் பிரியா கூறியதாவது:என் கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்ததால், கள்ளக்காதலன் உதவியுடன் கணவரை கார் ஏற்றி கொல்ல, 6ம் தேதி முயன்றேன். அப்போது அவர் லேசான காயங்களுடன் தப்பி விட்டார்.இதனால், காரிமங்கலம், மலைக்கோவிலைச் சேர்ந்த அருண்குமார், 23, சக்திவேல், 24, ஆகியோருடன் சேர்ந்து, நேற்று முன்தினம் வீட்டில் துாங்கி கொண்டிருந்தவரை, முகத்தில் தலையணையால் அமுக்கி கொல்ல முயன்றோம். இதிலும் அவர் தப்பினார்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.பிரியாவை கைது செய்த போலீசார், தலைமறைவான அருண்குமார், சக்திவேலை நேற்று கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dr Kannan - Yaadum Voorae,யூ.எஸ்.ஏ
19-பிப்-202012:26:28 IST Report Abuse
Dr Kannan அவர்களின் குழந்தைகளின் நிலைமையை எண்ணிபாருங்கள். ஆண்டவன் அவர்களுக்கு தைரியத்தையும் மனபக்குவதையும் கொடுக்கட்டும். மனைவின் நடத்தை சரியில்லை என்றால் சட்டப்படி விவாகரத்து பண்ணியிருந்தால் இந்த நிலைமைக்கு வந்திருக்காது.
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - என்னை மேலும் பிரபலப்படுத்திய போலிக்கு நன்றி ,இந்தியா
19-பிப்-202006:41:34 IST Report Abuse
Nallavan Nallavan ஆண்டிமுத்து ராசா அவர்களை எம்.பி. ஆக்கி அழகு பார்த்த தொகுதி -ன்னா பார்த்துக்குங்க ....
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - என்னை மேலும் பிரபலப்படுத்திய போலிக்கு நன்றி ,இந்தியா
19-பிப்-202006:38:33 IST Report Abuse
Nallavan Nallavan ராம் சேகரின் கருத்துக்கள் அருமை ..... அவர் மாலிக் -கிற்கு கொடுத்த பதிலடி "நச்" .....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X