சம்பவம் செய்தி

தமிழ்நாடு

முன்விரோத தகராறில் வாலிபர் கொலை

Added : பிப் 17, 2020
Share
Advertisement

மயிலாடுதுறை:மயிலாடுதுறை அருகே, முன்விரோத தகராறில், வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்டார்.
நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருகே, மாப்படுகை சாந்து காப்பு தெருவைச் சேர்ந்தவர் சபரிராஜ், 37; கொத்தனார். இவரது உறவினர், சதீஷ், 39. இருவரிடையே முன் விரோதம் உள்ளதாக தெரிகிறது.நேற்று மாலை, 6:௦௦ மணியளவில், சபரிராஜிடம், சதீஷ் தகராறு செய்துள்ளார். வாய் தகராறு முற்றி, கைகலப்பாக மாறியது. சதீஷ் கட்டை மற்றும் கம்பியால் சபரிராஜை தாக்கியதில், படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். மயிலாடுதுறை போலீசார், சதீஷை கைது செய்தனர். சதீஷ் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X