சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மனைவி, கள்ளக்காதலன் கொலை: கணவர் சரண்

Added : பிப் 17, 2020
Share
Advertisement

துாத்துக்குடி;மனைவி, அவரது கள்ளக்காதலனை வெட்டிக் கொலை செய்த கணவர், அரிவாளுடன் போலீசில் சரணடைந்தார்.
துாத்துக்குடி மாவட்டம், பசுவந்தனை அடுத்த புங்கவர்நத்தத்தைச் சேர்ந்தவர் சண்முகம், 59; விவசாயி. இவரது இரண்டாவது மனைவி மாரியம்மாள், 45. இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். சண்முகம் வீட்டிற்கு எதிர்புறம் ராமமூர்த்தி, 28, என்பவர் புதிதாக வீடு கட்டி வந்தார். அவருக்கு, மாரியம்மாளுடன் பழக்கம் ஏற்பட்டது. இதனால், மனைவி மீது சண்முகத்திற்கு சந்தேகம் இருந்தது.சண்முகம் நேற்று அதிகாலையில், வயலுக்கு செல்லாமல், வீட்டில் வேறு ஓர் அறையில் துாங்கி கொண்டிருந்தார். அவர் வயலுக்கு சென்று விட்டதாக கருதி, வீட்டிற்குள் வந்த ராமமூர்த்தி, மாரியம்மாளுடன் தனிமையில் இருந்தார்.அந்த சத்தத்தில் எழுந்த சண்முகம், ஒரே கட்டிலில் இருவரையும் பார்த்தார். ஆத்திரத்தில், அரிவாளால் இருவரையும் சரமாரியாக வெட்டினார். ராமமூர்த்தியின் தலையை தனியாக துண்டித்தார். இருவரும், சம்பவ இடத்திலேயே இறந்தனர். சண்முகம், அரிவாளுடன் பசுவந்தனை போலீசில் சரணடைந்தார். அவரை கைது செய்து, பசுவந்தனை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X