அரசியல் செய்தி

தமிழ்நாடு

ரஜினி தனித்து போட்டி? தமிழருவி மணியன் சூசகம்

Updated : பிப் 17, 2020 | Added : பிப் 17, 2020 | கருத்துகள் (53)
Share
Advertisement

திருப்பூர்:''ரஜினி யாருடனும் கூட்டணி வைக்க மாட்டார்; 234 தொகுதிகளிலும் தனித்து
போட்டியிட யோசித்து வருகிறார்,'' என்று தமிழருவி மணியன் கூறினார்.latest tamil newsதிருப்பூரில் நேற்று நடந்த, நுால் அறிமுக விழாவில், காந்திய மக்கள் இயக்க தலைவர்
தமிழருவி மணியன் பேசியதாவது:ஆட்சி நாற்காலியில் அமர வேண்டியவர் துறவி போல் இருக்க வேண்டும். பொது சொத்தில் கை வைக்காதவராக இருக்க வேண்டும். அதற்கு, ரஜினி, முதல்வர் நாற்காலியில் அமர வேண்டும் என்பது எனது ஆசை.

ஸ்டாலின், அரசியல் நாடகம் நடத்துகிறார். ஏன் தி.மு.க., கூட்டணியில் காங்., இருந்தபோது, மத்தியில் ஆட்சி செய்தபோது கோர்ட்டில் வழக்கு மொழியாக தமிழ் வர வேண்டும் என்றோ, இலங்கை தமிழருக்கு குடியுரிமை வர வேண்டும் என்றோ போராடி இருக்கலாமே.திராவிட
கட்சிகள் ஆளாமல் இருந்தால், இந்தியாவில் முதல் மாநிலமாக தமிழகம் இருந்திருக்கும். ஊழல் ஊறிபோயிருந்தும் தமிழகம் வளர்ந்திருக்கிறது என்றால், அதற்கு காரணம், தமிழனின் உழைப்பு.


latest tamil newsமீண்டும் தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், 30 ஆண்டுகளுக்கு தமிழகத்துக்கு சாப விமோசனம்
கிடையாது. ரஜினி அரசியலுக்கு வந்தால் ஆட்சி மாற்றம் ஏற்படும். நாம் சென்று விட வேண்டும் என தி.மு.க.,வினர் கவலைப்படுகின்றனர்.ரஜினி யாருடன் கூட்டணி வைக்க மாட்டார். 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட யோசிக்கிறார். ஆன்மிக அரசியலே அவரது திட்டம்.

இவ்வாறு, தமிழருவிமணியன் பேசினார்.


'தி.மு.க.,வினர் பேட்டிசிரிப்பு தான் வருது...'

தமிழருவி மணியன் பேசுகையில், ''தினமலர் நாளிதழில், குடியுரிமை சட்டம் குறித்து தி.மு.க., கட்சி நிர்வாகிகள் அளித்த பேட்டியை படித்தேன். எனக்கு 'சிரிப்பாய்' வருகிறது. சட்ட திருத்த விளக்கத்தை கூட தெரியாமல், கட்சி தலைமை சொல்வதை கேட்டு, செயல்படுகிறார்கள். இவர்களை நினைத்து சிரிப்புதான் வருகிறது,'' என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (53)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Poongavoor Raghupathy - MUMBAI,இந்தியா
18-பிப்-202021:37:28 IST Report Abuse
Poongavoor Raghupathy Tamilnadu party's image today- DMK-WORST VIDUTHALAI SIRUTHAI- WORST VAIKO-WORST COMMUNIST-WORST KAMALAHASAN- BAD DINAKARAN-BAD ADMK- GOOD NAM TAMILAR-WORST RAJINI-BETTER BJP- GOOD CONGRESS- SINKING IN A BOAT The worst Parties are beyond repair and other Parties can improve Tamilnadu people to decide in 2021 election. Rajini out of the present lot of Parties is to be preferred though not best. People have to carefully choose Party without any venom that is Rajini and definitely not DMK the most venomous Party today in the whole of India.
Rate this:
Cancel
Rafi - Riyadh,சவுதி அரேபியா
17-பிப்-202022:50:21 IST Report Abuse
Rafi தி மு கா ஆச்சி போய் எட்டாண்டுகளுக்கு மேல் ஆகியும், இன்னும் எதார்த்தத்தை உணராமல், அல்லது உண்மை நிலையை மறைத்து தி மு காவின் வலிமையை கண்டு கவலை படுகின்றார்கள் என்றால் இவர்களை இயக்குவது யார் என்பது நன்றாக புலப்படும். எதை தின்றால் பித்தம் தணியும் என்பதற்கிணங்க திரு ரஜினி உடைய புகழில் குளிர்காய இடம் தேடுகின்றார்கள். தி மு கா என்பது தலை குனிய வைத்த சமூகத்தை தலை நிமிர வைத்து அவர்கள் எதிர் கேள்வி கேட்கும் உன்னத நிலைக்கு கொண்டுவந்தவர்கள் என்பதை தமிழர்கள் நன்கறிவார்கள். இப்போது இந்தியாவில் முதல் மாநிலம்மாக இருப்பதும் அதன் வரிசையில் தமிழகம் எத்தனையாவது இடத்தில் இருக்கு என்பதை தெரிவித்தாரா?
Rate this:
Cancel
KalyanaSundaram K.M - Tirunelveli,இந்தியா
17-பிப்-202022:27:54 IST Report Abuse
KalyanaSundaram K.M பெரிய சோ ன்னு நினைப்பு. ஆம்பளனா ரஜினியின் சொந்த பணத்தை வைத்து எல்லா தொகுதிக்கும் டெபாசிட் கட்ட சொல்லு. நாங்கள் யாருன்னு அப்ப தெரியும். இவன பத்தி செய்தி வந்தாலே எரிச்சல் தான் வருது. சுயநலவாதி....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X