சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தனுஷ்கோடியில் 17 கிலோ தங்கம் கடத்தல்

Added : பிப் 17, 2020
Share
Advertisement
 தனுஷ்கோடியில் 17 கிலோ தங்கம் கடத்தல்

ராமேஸ்வரம்;இலங்கையிலிருந்து தனுஷ்கோடிக்கு வந்த படகுகளில் கடத்திய 17கிலோ தங்கத்தை போலீசார் பறிமுதல் செய்து,6 பேரை போலீசார் கைது செய்தனர்.
பிப்.,15ல் தனுஷ்கோடி கடலில் படகுடன் ஊடுருவிய இலங்கை நபர்கள் 3 பேரை, இந்திய கடற்படையினர் பிடித்து மரைன் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இவர்களிடம் மரைன், 'கியூ' பிரிவு போலீசார் நடத்திய விசாரனையில், இலங்கை தலைமன்னாரில் இருந்து 3.5 கிலோ தங்க கட்டிகள் கடத்தி வந்து, ராமேஸ்வரம் விசைப்படகில் மீனவர்கள் போர்வையில் வரும் 4 பேரிடம் தங்கத்தை கொடுக்க வந்ததாக தெரிவித்தனர்.
இதனையடுத்து மரைன், 'கியூ', பிரிவு சுங்கத்துறையினர் ராமேஸ்வரம் விசைப்படகு அதில் சென்ற ராமேஸ்வரத்தை சேர்ந்த லெட்சுமணன்44, சர்வேஸ்வரன்38, தங்கச்சிமடம் சேர்ந்த தியோனியஸ்34, தனுஷியாஸ்38, ஆகியோரை கைது செய்தனர். மேலும் இலங்கை படகில் மறைத்து வைத்திருந்த ரூ.1.48 கோடி மதிப்புள்ள 3.5 கிலோ தங்கத்தை சுங்கத்துறையினர் கைப்பற்றினர்.
மேலும் இலங்கை கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, கடலலில் சென்ற பைபர் படகை பிடித்து சோதனை நடத்தினர். அப்போது, படகில் இருந்த 14 கிலோ 35 கிராம் தங்கம் சிக்கியது.இது தொடர்பாக யாழ்ப்பாணம் மாதகல் பகுதியை சேர்ந்த இருவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
அதில் அவர்கள், யாழ்ப்பாணத்தில் மக்களிடம் திருடிய நகைகளை விலைக்கு வாங்கி அதனை உருக்கி தங்கக்கட்டிகளாக மாற்றி, பைபர் படகு மூலம் தனுஷ்கோடிக்கு விற்பனைக்கு கொண்டு சென்று, சென்னையை சேர்ந்த தங்க நகை வியாபாரிகளிடம் விற்க முயன்றது தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.5.40 கோடி என தெரிகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X