சம்பவம் செய்தி

தமிழ்நாடு

முன்விரோத தகராறில் வாலிபர் அடித்து கொலை

Added : பிப் 17, 2020
Share
Advertisement

மயிலாடுதுறை:மயிலாடுதுறை அருகே, முன்விரோத தகராறில் வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்டார்.
நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருகே மாப்படுகை சாந்துகாப்பு தெருவை சேர்ந்தவர் சபரிராஜ்,37; கொத்தனார். இவரது உறவினர் கிட்டப்பாபாலம் ஹாஜியா நகரை சேர்ந்தவர் சதீஷ்,39. இருவரிடையே முன் விரோதம் உள்ளதாக தெரிகிறது. இந்நிலையில், நேற்று மாலை 6.௦௦ மணியளவில், சபரிராஜிடம், சதீஷ் தகராறு செய்துள்ளார். வாய் தகராறு முற்றி, கைகலப்பாக மாறியது. சதீஷ் கட்டை மற்றும் கம்பியால் சபரிராஜை தாக்கியதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.தகவல் அறிந்த மயிலாடுதுறை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, சபரிராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து வழக்கு பதிந்து, சதீஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். கைதுசெய்யப்பட்ட சதீஷ் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X