அரசியல் செய்தி

தமிழ்நாடு

ரஜினி தனித்து போட்டி: தமிழருவி மணியன் சூசகம்

Added : பிப் 17, 2020
Share
Advertisement

திருப்பூர்:''ரஜினி யாருடனும் கூட்டணி வைக்க மாட்டார்; 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட யோசித்து வருகிறார்,'' என்று தமிழருவி மணியன் கூறினார்.

திருப்பூரில் நேற்று நடந்த, 'ஒரு வழிப்போக்கனின் வாழ்க்கைப் பயணம்' நுால் அறிமுக விழாவில், 'எங்கே போகிறது நாடு' எனும் தலைப்பில், காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் பேசியதாவது:ஆட்சி நாற்காலியில் அமர வேண்டியவர் துறவி போல் இருக்க வேண்டும். பொது சொத்தில் கை வைக்காதவராக இருக்க வேண்டும். அதற்கு, ரஜினி, முதல்வர் நாற்காலியில் அமர வேண்டும் என்பது எனது ஆசை.ஸ்டாலின், அரசியல் நாடகம் நடத்துகிறார். ஏன் தி.மு.க., கூட்டணியில் காங்., இருந்தபோது, மத்தியில் ஆட்சி செய்தபோது கோர்ட்டில் வழக்கு மொழியாக தமிழ் வர வேண்டும் என்றோ, இலங்கை தமிழருக்கு குடியுரிமை வர வேண்டும் என்றோ போராடி இருக்கலாமே.திராவிட கட்சிகள் ஆளாமல் இருந்தால், இந்தியாவில் முதல் மாநிலமாக தமிழகம் இருந்திருக்கும். ஊழல் ஊறிபோயிருந்தும் தமிழகம் வளர்ந்திருக்கிறது என்றால், அதற்கு காரணம், தமிழனின் உழைப்பு. மீண்டும் தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், 30 ஆண்டுகளுக்கு தமிழகத்துக்கு சாப விமோசனம் கிடையாது.
ரஜினி அரசியலுக்கு வந்தால் ஆட்சி மாற்றம் ஏற்படும். நாம் சென்று விட வேண்டும் என தி.மு.க.,வினர் கவலைப்படுகின்றனர். ரஜினி யாருடன் கூட்டணி வைக்க மாட்டார். 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட யோசிக்கிறார். ஆன்மிக அரசியலே அவரது திட்டம்.இவ்வாறு, தமிழருவிமணியன் பேசினார்.
'தி.மு.க.,வினர் பேட்டி சிரிப்பு தான் வருது...'

தமிழருவி மணியன் பேசுகையில், ''தினமலர் நாளிதழில், குடியுரிமை சட்டம் குறித்து தி.மு.க., கட்சி நிர்வாகிகள் அளித்த பேட்டியை படித்தேன். எனக்கு 'சிரிப்பாய்' வருகிறது. சட்ட திருத்த விளக்கத்தை கூட தெரியாமல், கட்சி தலைமை சொல்வதை கேட்டு, செயல்படுகிறார்கள். இவர்களை நினைத்து சிரிப்புதான் வருகிறது,'' என்றார்.



Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X