அரசியல் செய்தி

தமிழ்நாடு

இந்தியர்களின் புனித நூல் 'அரசியல் சாசனம்'

Added : பிப் 17, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
இந்தியர்களின் புனித நூல் 'அரசியல் சாசனம்'

மதுரை:''ஒவ்வொரு மதத்தினருக்கும் ஒரு புனித நுால் இருந்தாலும் இந்திய அரசியல் சாசனம் தான் நம் புனித நுால்'' என, மதுரையில் மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி தெரிவித்தார்.
மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் நடந்த அரசியல் விளக்க பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது: நம் நாட்டில் சில மாதங்களாக சமூகம், பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. நெருக்கடி நிலை குறித்து மக்கள் தெரிந்து கொள்வதோடு அதை சமாளிக்க கரம் கோர்க்க வேண்டும்.மருத்துவமனை இல்லாத காலத்தில் பிறந்தவர்கள், புலம் பெயர்ந்தவர்கள், பழங்குடிகள் என, பல்வேறு எளிய மக்களிடம் பிறப்பு சான்றிதழ் இருக்க வாய்ப்பு இல்லை.
இவர்களிடம் பிறப்பு சான்று இருந்தால் தான் இந்தியர்கள் என அங்கீகரிக்க முடியும் என்கிறது குடியுரிமை திருத்த சட்டம். இது போன்று பல குழப்பங்களை இந்த சட்டம் ஏற்படுத்துகிறது.நம் குடியரசின் மீது நடக்கும் தாக்குதல்களை எதிர் கொள்ளும் காலம் இது. இந்தியர்களாகிய நமக்கு இந்திய அரசியல் சாசனம் புனித நுாலாக இருக்கிறது என்பதை நினைவில் நிறுத்த வேண்டும்'' என்றார்.
எம்.பி.,சு. வெங்கடேசன், முன்னாள் எம்.எல்.ஏக்கள் நன்மாறன், பாலபாரதி, மார்க்சிஸ்ட் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
17-பிப்-202007:43:07 IST Report Abuse
Bhaskaran இவன் ஒரு வேலையில்லாத வெட்டி .போனியாகாத கட்சியின் தலைவர் மாநில கட்சிகளின் காலில் விழுந்து ராஜ்யசபா உறுப்பினர் ஆகி வாழ்க்கை நடத்துபவன்
Rate this:
Cancel
17-பிப்-202007:37:02 IST Report Abuse
  karthik இந்தியாவின் புனித நூல் பகவத்கீதை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X