சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திருமணத்திற்கு மறுத்த காதலன் பெற்றோருடன் தீக்குளிக்க முயன்ற காதலி

Added : பிப் 17, 2020
Share
Advertisement

கடலுார்:கடலுார், எஸ்.பி., அலுவலக வளாகத்தில், கல்லுாரி மாணவி, பெற்றோருடன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு நிலவியது.
கடலுார் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த, 17 வயது மாணவி, தனியார் கல்லுாரியில், முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.இவரும், அதே ஊரைச் சேர்ந்த வாலிபரும், ஆறு மாதங்களாக காதலித்து வந்தனர். இருவரும் தனிமையில் இருந்ததைப் பார்த்த, பெண்ணின் பெற்றோர் கண்டித்துள்ளனர். மாணவியின் பெற்றோர், வாலிபரின் வீட்டிற்கு சென்று, நியாயம் கேட்டனர். அவர்கள், 'வாலிபரின் அண்ணனுக்கு திருமணம் நடக்க உள்ளது. அதன்பின் பேசிக் கொள்ளலாம்' எனக் கூறி, அனுப்பினர். பின், வாலிபரின் பெற்றோர் திருமணத்திற்கு மறுத்து விட்டனர்.
பெண்ணின் பெற்றோர், குறிஞ்சிப்பாடி போலீசில் புகார் அளித்தனர். போலீசார், புகாரை வாங்க மறுத்ததுடன், மாணவியின் சகோதரரை தாக்கி, மிரட்டியுள்ளனர்.இதனால், மனமுடைந்த மாணவி, அவரது தாய், தந்தை ஆகியோர், நேற்று மாலை கடலுார், எஸ்.பி.,யை சந்திக்க வந்தனர். எஸ்.பி., அலுவலக வளாகத்தில், திடீரென மூவரும் தங்கள் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.
பணியில் இருந்த ஆயுதப்படை போலீசார், அவர்கள் மீது தண்ணீர் ஊற்றி, தடுத்தனர். கடலுார் புதுநகர் போலீசார், மூவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று, விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X