முதுமையால் 8 வயது சிறுமி உயிரிழப்பு: அரிய வகை நோயால் சோகம்

Updated : பிப் 17, 2020 | Added : பிப் 17, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement

கீவ்: உக்ரைனில் 8 வயதே ஆன சிறுமி, முதுமை நோயால் உயிரிழந்தது, பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



latest tamil news



கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனில் வசித்து வருபவர், இவானா. இவருக்கு, அன்னா சாகிடோன் என்ற பெண் குழந்தை இருந்தது. உலகில் வெறும், 160 பேரை மட்டுமே பாதித்துள்ள, 'புரோஜீரியா' என்ற மரபணு நோயால், அக்குழந்தையும் பாதிக்கப்பட்டிருந்தது.

8 வயதே ஆன அச்சிறுமி, 80 வயதுக்கான முதுமையுடன் இருந்தார். வெறும், 7 கிலோ எடைகொண்ட அவர், உடல்நலக்குறைவு காரணமாக, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், மருத்துவ மனையில் அச்சிறுமியின் உடல் உள் உறுப்புகள், அடுத்தடுத்து செயலிழந்தன. டாக்டர்கள் கடுமையாக போராடியும் பலனளிக்காததால், நேற்று முன்தினம் (பிப்.,15), சிறுமி அன்னா சாகிடோன், பரிதாபமாக உயிரிழந்தார்.


latest tamil news



கண்ணீருடன் அவரின் தாய் இவானா கூறுகையில், “என் மகளை நல்ல உடல் நலத்துடன் இருக்க வைக்க, எதையும் தியாகம் செய்ய தயாராக இருந்தேன்,” என்றார். உலகிலேயே, மிக குறைந்த வயதில், முதுமை காரணமாக உயிரிழந்தவர், அன்னா என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
17-பிப்-202010:37:13 IST Report Abuse
கணேஷ் கடவுளின் குழந்தை
Rate this:
Share this comment
Cancel
Citizen_India - Woodlands,இந்தியா
17-பிப்-202007:04:03 IST Report Abuse
Citizen_India ஆழ்ந்த இரங்கல்கள், ஆன்மா சாந்தி அடைய கடவுள் அருள் புரியட்டும்
Rate this:
Share this comment
Cancel
kumzi - trichy,இந்தியா
17-பிப்-202003:13:12 IST Report Abuse
kumzi god bless you child
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X