பொது செய்தி

தமிழ்நாடு

வாடகைக்கு விடப்படும் பி.எஸ்.என்.எல்., கட்டடங்கள்..

Updated : பிப் 17, 2020 | Added : பிப் 17, 2020 | கருத்துகள் (27)
Share
Advertisement

அவிநாசி: பி.எஸ்.என்.எல்., கட்டடங்கள், வாடகைக்கு விடப்படுகின்றன.பொதுத் துறை தொலைதொடர்பு நிறுவனமான, பி.எஸ்.என்.எல்., கடும் நஷ்டத்தில் இயங்கி வருகிறது.



latest tamil news



பொருளாதார சிக்கலில் இருந்து விடுபடுவதற்காக, ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டத்தை அறிவித்தது.பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தில், 1.76 லட்சம் ஊழியர்கள் பணிபுரிந்து வந்தனர். சில மாதங்களுக்கு முன், ஒரே நாளில், 78 ஆயிரத்து, 500 ஊழியர்கள் விருப்ப ஓய்வு பெற்றனர். இதனால், ஊழியர்கள் எண்ணிக்கை பாதியாகக் குறைந்தது. ஊரக பகுதி அலுவலகங்களில், குறைந்த ஊழியர்களே பணிபுரிகின்றனர்.பெரும்பாலான பி.எஸ்.என்.எல்., அலுவலகங்கள், சொந்த கட்டடத்தில் இயங்குகின்றன.

பயன்பாடு குறைந்த கட்டடங்களை வாடகைக்கு விட, நிர்வாகம் முடிவு செய்திருக்கிறது. வசதி குறைந்த இடத்தில் செயல்படும் மத்திய - மாநில அரசு நிறுவனங்கள், பி.எஸ்.என்.எல்., இடங்களை வாடகைக்கு எடுக்க ஆர்வம் காட்டி வருகின்றன.திருப்பூர் மாவட்டம், அவிநாசி, பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தில், 20க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வந்த நிலையில், தற்போது, ஆறு பேர் மட்டுமே பணிபுரிகின்றனர்.பெரிய அறையில் செயல்பட்டு வந்த, வாடிக்கையாளர் சேவை மைய கட்டடம், சிறிய கட்டடத்துக்கு மாற்றப்பட்டு உள்ளது.


latest tamil news



மேலும், தமிழக மற்றும் கேரள, பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர்களுக்காக, 'கால் சென்டர்' சேவை வழங்கி வரும், தனியார் நிறுவன பயன்பாட்டுக்கு, தரை தளம் மற்றும் முதல் தளம் வாடகைக்கு விடப்பட்டுள்ளது. இதேபோல, பல்வேறு இடங்களில் உள்ள, பி.எஸ்.என்.எல்., கட்டடங்கள், வேறு பல அரசு துறைகள் மற்றும் பிற நிறுவனங்களுக்கு வாடகைக்கு விடப்படுகின்றன.

Advertisement




வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallappan Kannan Nallappan - Perambalur,இந்தியா
17-பிப்-202020:49:14 IST Report Abuse
Nallappan Kannan Nallappan நான் மதவாதி இல்லை. ஆன்மீகத்தை நம்புபவன்,ஆன்மீகத்தை மதிக்கும் இந்து - Bangalore,இந்தியா நீ ஆன்மீகத்தை மதிக்க வேண்டாம் நீ உன்னையும் உன்முளையும் மதி போதும்
Rate this:
Share this comment
Cancel
krish - chennai,இந்தியா
17-பிப்-202019:44:13 IST Report Abuse
krish பேசாம தனியார் நிறுவனங்களுக்கு சேவையை, கட்டாய காப்பு கட்டண தொகைக்கு லீசுக்கு விட்டு, நிர்வகிக்கலாம். நிரந்தர நிர்வாக செலவுகள் மிச்சம்.
Rate this:
Share this comment
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
17-பிப்-202017:27:50 IST Report Abuse
Mani . V மக்களின் வரிப் பணத்தை எப்படியெல்லாம் விரயம் செய்கிறார்கள்?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X