அமெரிக்காவில் 'யோகா' பல்கலை; ஆகஸ்டில் பயிற்சி வகுப்புகள்

Added : பிப் 17, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
Yoga,America,US,University,யோகா,பல்கலை,அமெரிக்கா

வாஷிங்டன்: அமெரிக்காவில் அமைக்கப்பட்டுள்ள, முதல், 'யோகா' பல்கலை கழகத்தில், முதுநிலை பட்ட படிப்பின் வகுப்புகள், ஆகஸ்ட் மாதம் துவங்கவுள்ளன.

அமெரிக்காவின், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், யோகா பல்கலைக் கழகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு வெளியே நிறுவப்பட்டுள்ள, முதல் யோகா பல்கலையான இதை, வாயு எனப்படும், விவேகானந்தா யோகா பல்கலை, 35.76 கோடி ரூபாய் மதிப்பில் கட்டமைத்துள்ளது. இங்கு, சில மாதங்களில், வகுப்புகள் துவங்க உள்ளன.


latest tamil news



இது குறித்து, பல்கலை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருந்ததாவது: பல்கலையின் தலைவராக, 'கேஸ் வெஸ்டர்ன் பல்கலை' பேராசிரியர் ஸ்ரீ ஸ்ரீநாத் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய யோகா ஆசிரியரான, எச்.ஆர்.நாகேந்திராவுக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. யோகாவில், முதுநிலை பட்டப் படிப்பை பெற விரும்புவோர், இங்கு சேரலாம். வகுப்புகள், வரும் ஆகஸ்ட் மாதம் துவங்கவுள்ளன; அதற்கான சேர்க்கை, ஏப்ரல் மாதத்தில் துவங்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த பல்கலை, நாடு முழுவதும் உள்ள முதன்மை பல்கலைகளுடன் இணைந்து, கூட்டு ஆராய்ச்சியில் ஈடுபடவுள்ளது. இதனால், யோகா, தியானம், உலகம் முழுவதும் சென்றடையும். இந்த பல்கலை மூலம், அமெரிக்காவில் உள்ள யோகா ஆசிரியர்கள் பெரிதும் பயனடைவர். கடந்த நவம்பர் மாதம், இந்த பல்கலையை நடத்துவதற்கான அங்கீகாரத்தை, கலிபோர்னியாவில் உள்ள, தனியார் முதுநிலை கல்விக்கான பணியகம் வழங்கியது. ஒப்புதல் வழங்கி மூன்று மாதங்களே ஆன நிலையில், பயிற்சி வகுப்புகள் துவங்கப்படுவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
17-பிப்-202011:31:40 IST Report Abuse
ஆப்பு இதுக்கு முன்னாடியே ரஜனீஷ் யோகா அது இதுன்னு கொஞ்சகாலம். பொறகு பீட்டில்ஸ் பாடகர் ஆதரவுடன் மகேஷ் யோகி கொஞ்சநாள் நடத்துனாரு. அமெரிக்கர்கள் புதுமை விரும்பிகள். இதுல சேர்ந்து கொஞ்ச நாளைக்கப்புறம் வேற எதுக்காவது தாவிடுவாங்க.
Rate this:
Share this comment
Cancel
K.Muthuraj - Sivakasi,இந்தியா
17-பிப்-202009:55:51 IST Report Abuse
K.Muthuraj இந்தியர்கள் வசம் யோகா இருந்தபொழுது ஒரு முன்னேற்றமும் அடையவில்லை. ஏன் குறிப்பிட்ட சிலரை தவிர யாருக்கும் தெரியவில்லை. மேலை நாடுகள் வசம் சென்ற பின் என்ன ஒரு முன்னேற்றம் பாருங்கள்.
Rate this:
Share this comment
Cancel
Balasubramanian - Bangalore,இந்தியா
17-பிப்-202009:08:59 IST Report Abuse
Balasubramanian ஆஹா, இனி யோகா கற்பிக்க அமெரிக்க பல்கலைக்கழக சான்றிதழ் பெற்ற ஆசிரியர்களை இங்கு யாரும் நியமிக்கலாம். அமெரிக்கன் சர்டிபைட் யோகா கிளாஸஸ் என்று ஆங்கில தமிழ் தொலைக்காட்சியில் விளம்பரம் செய்யலாம். உயர்மட்ட ஆணும் பெண்ணும், நடிக நடிகையர்களும் யோகாவில் சேர்ந்த பிறகு என் வாழ்க்கை பாதையில் முன்னேற்றம் என்று கதைக்கலாம். பணத்தை அள்ளி கிரேடு கிரேடாக சர்டிபிகேட் வழங்கலாம். கட்டாம்பட்டியில் கிளாஸ் திறப்பவருக்கு அமெரிக்க சுற்றுலா.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X