2 கோடி பேர் கையெழுத்து படிவம், ஜனாதிபதிக்கு அனுப்பியது திமுக| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

2 கோடி பேர் கையெழுத்து படிவம், ஜனாதிபதிக்கு அனுப்பியது திமுக

Updated : பிப் 17, 2020 | Added : பிப் 17, 2020 | கருத்துகள் (208)
Share
DMK,antiCAA,signature_campaign,MKStalin,Stalin,ஸ்டாலின்,திமுக

சென்னை: குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து பெறப்பட்ட, இரண்டு கோடி கையெழுத்து படிவங்களை, தி.மு.க., நேற்று(பிப்.,16), ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தது.


குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றிற்கு எதிராக, கையெழுத்து இயக்கம் நடத்த, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தலைமையில், ஜன., 24ல் நடந்த கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டத்தில் முடிவானது. இதன்படி, இம்மாதம், 2 முதல், 8 வரை, தமிழகம் முழுவதும் கையெழுத்து வேட்டை நடந்தது. ஸ்டாலின் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள், மாநிலம் முழுவதும், மக்கள் கூடும் இடங்களிலும், வீடு, வீடாகவும் சென்றும், 2 கோடியே, ஐந்து லட்சத்து, 66 ஆயிரத்து, 82 கையெழுத்துகள் பெற்றனர்


latest tamil news



.சென்னை அறிவாலயத்தில் உள்ள அண்ணாதுரை, கருணாநிதி சிலை அருகில், ஸ்டாலின் தலைமையில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வீரமணி, வைகோ, திருமாவளவன், தங்கபாலு, டி.கே.ரங்கராஜன், ஜவாஹிருல்லா, அபுபக்கர் நேற்று கூடினர். அனைத்து கையெழுத்து படிவங்களையும், ஜனாதிபதிக்கு, விமானம் வாயிலாக, அனுப்பி வைத்தனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X