ஸ்ரீநகர்: காஷ்மீரில், மக்கள் ஜனநாய கட்சி தலைவர் மெகபூபா முப்தி மீது, பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்வதற்கான காரணங்களில், போலீசார் அறிக்கையில் பயன்படுத்தியுள்ள வார்த்தைகள் எடுத்துக் கொள்ளப்படவில்லை என, விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு - காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை, கடந்தாண்டு ஆகஸ்டில் மத்திய அரசு ரத்து செய்தது. முன் எச்சரிக்கை நடவடிக்கையாக, முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, ஒமர் அப்துல்லா, மெகபூபா முப்தி ஆகியோர், பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா மீது, பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டதற்கான காரணங்களை, போலீசார், அரசுக்கு அளித்திருந்தனர். அதில், தங்கள் கட்சி கூட்டங்களில் பேசும்போது, பிரிவினைவாதத்தை துாண்டும் வகையில் கருத்துக்களை தெரிவித்ததாகவும், வன்முறையை துாண்டும் வகையிலும் பேசியதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், அதில், மெகபூபா முப்தி, அவரது தந்தை முப்தி முகமது சயீது வழியை பின்பற்றுபவர் என குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், மேலும் சில, சர்ச்சைக்குரிய வார்த்தைகள் அதில் இடம் பெற்றுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், காஷ்மீர் அதிகாரிகள் கூறியதாவது: மெகபூபா மீது பொது பாதுகாப்பு சட்டம் பாய்ந்ததற்கு பல காரணங்கள் உள்ளன. போலீசார் அறிக்கையின் அடிப்படையில், மாவட்ட கலெக்டர் தான், பொது பாதுகாப்பு சட்டத்தை, சம்பந்தபட்ட நபர் மீது பதிவு செய்ய வேண்டும். போலீசார் அளித்த அறிக்கையில் உள்ளவை, அப்படியே பதிவு செய்யப்படவில்லை. நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கான ஆவணங்களில், சர்ச்சைக்குரிய அந்த வார்த்தைகள் இடம் பெறவில்லை. இந்த வார்த்தைகளை, பொது பாதுகாப்பு சட்டம் பாய்வதற்கான காரணமாக, கலெக்டர் குறிப்பிடவில்லை. இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE