சம்பவம் செய்தி

தமிழ்நாடு

புதுக்கோட்டை இளைஞருக்கு கோவிட்- 19: கலெக்டர் மறுப்பு

Updated : பிப் 17, 2020 | Added : பிப் 17, 2020 | கருத்துகள் (17)
Share
Advertisement

இந்த செய்தியை கேட்க

புதுக்கோட்டை : சீனாவில் இருந்து திரும்பிய புதுக்கோட்டையைச் சேர்ந்த நபர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் உயிரிழந்தார். இதனால் அவருக்கு கொரோனா வைரஸ் (கோவிட்-19) பாதிப்பு இருந்திருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. ஆனால் அவருக்கு வைரஸ் பாதிப்பு இல்லை என கலெக்டர் மறுப்பு தெரிவித்துள்ளார்.



latest tamil news



புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி பகுதியைச் சேர்ந்தவர் சக்திகுமார். இவர் கடந்த 4-ஆம் தேதி சீனாவில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பினார். இந்நிலையில் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர், கடந்த 14-ஆம் தேதி உயிரிழந்தார். அவருக்கு நுரையீரல் பாதிப்பு மற்றும் மஞ்சள் காமாலை இருந்ததாக கூறப்படுகிறது. சக்திகுமார் இறந்தது குறித்து சுகாதாரத்துறையிடம் கேட்டபோதுதான் சக்திகுமார் சீனாவில் இருந்து திரும்பியவர் என்பது அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது. சீனாவில் இருந்து திரும்பியவர்களை கண்காணித்து வருவதாக கூறும் நபர்களின் பட்டியலில் சக்திகுமார் பெயர் இடம்பெறவில்லை. இந்த சூழலில் சக்திகுமார் உயிரிழந்த நிகழ்வு அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


latest tamil news



சீனாவில் இருந்து வருபவர்களை தொடர் கண்காணிப்பில் வைத்திருந்து 14 நாட்களுக்குப் பிறகே அவரை வெளியே செல்ல அனுமதிப்பதாக அதிகாரிகள் தொடர்ச்சியாக சொல்லி வரும் நிலையில் இந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. உயிரிழந்த சக்திகுமாருக்கு கோவிட்-19 பாதிப்பு இருந்திருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. ஆனால் அவருக்கு வைரஸ் பாதிப்பு இல்லை என மாவட்ட கலெக்டர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
17-பிப்-202017:54:15 IST Report Abuse
ஆரூர் ரங் இதே மாவட்டத்தின் அருகே திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகேயுள்ள நடுக்காட்டுப்பட்டி பகுதியில் அலட்சியத்தால் போர்வெல் குழாயில் விழுந்து மரணித்த குழந்தையின் தகப்பனுக்கே பல லட்சம் வாரிவிட்ட சுடாலின் இவரது குடும்பத்திற்கு என்ன கொடுப்பார்? ஓ அது சிறுபான்மையினருக்கு மட்டுமேதானோ?
Rate this:
Share this comment
Cancel
SaiBaba - Chennai,இந்தியா
17-பிப்-202013:11:54 IST Report Abuse
SaiBaba மருத்துவர்கள், உடனிருந்த நோயாளிகள், உறவினர் அனைவரையும் சோதிப்பது நல்லது.
Rate this:
Share this comment
Cancel
sundar - Hong Kong,சீனா
17-பிப்-202012:31:24 IST Report Abuse
sundar நமது மாநிலத்தில் இந்த விஷயத்தில் அரசு மிக சிறப்பாக செயல்படுகிறது. நான் 10 நாட்களுக்கு முன்பு ஹாங்காங் லிருந்து திருச்சி வந்தேன். திருச்சி விமான நிலையத்தில் சீனா மற்றும் ஹொங்கொங்கில் இருந்து வந்தவர்களை தனியாக அழைத்து தங்கும் வீட்டு விலாசம் மற்றும் தொலைபேசி என்னை வாங்கிக் கொண்டார்கள். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை சுகாதாரதுறை அலுவலர்கள் உடல்நலம் பற்றி கேட்கிறார்கள். வந்த மூன்றாம் நாள் திருச்சி அரசு மருத்துவமனை மருத்துவர் வீட்டிற்கு வந்து பரிசோதனை செய்தார். நான் ஹாங்காங் லிருத்து கிளம்பிய அன்று சில நண்பர்கள் பெங்களூர் போனார்கள். ஆனால் அவர்களுக்கு இந்த பரிசோதனை இல்லையாம். வருபவர்கள் நம் சரியான விலாசம் தரவேண்டும். இந்த நண்பர் மறைந்திருக்கலாம், அல்லது வேறு பிரச்னை இருக்கலாம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X