அப்போ அப்படி...! இப்போ இப்படி!: மாற்றிப் பேசும் சிதம்பரம்

Updated : பிப் 17, 2020 | Added : பிப் 17, 2020 | கருத்துகள் (154)
Share
Advertisement

புதுடில்லி : என்பிஆர் எனப்படும் தேசிய மக்கள்தொகை பதிவை ஆதரித்து 2012ல் பேசிய ப.சிதம்பரம், 2020ல் அதற்கு எதிராக பேசி வருகிறார். சிதம்பரத்தின் இந்த இரட்டை நிலைப்பாட்டு கருத்தை ஒப்பிட்டு வெளியான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.



latest tamil news


என்பிஆர்., குறித்து 2012 ல் முந்தைய காங்., ஆட்சியின் போது மத்திய அமைச்சராக இருந்த சிதம்பரம் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, என்பிஆரை, நிச்சயமாக கொண்டு வர முடியும். அனைவரும் அதில் பதிவு செய்ய வேண்டும். முதல் முகாமில் பதிவு செய்யாதவர்கள், 2வது முகாமில் பதிவு செய்ய வேண்டும்.

அப்படியும் பதிவு செய்யாமல் விடுபடுபவர்களுக்கு தனியாக நோட்டீஸ் அனுப்பப்படும். அவர்கள் தாலுகா அலுவலகத்தில் நேராக சென்று பதிவு செய்ய வேண்டும். இன்று மக்கள்தொகை பதிவு என்பது நாளை குடியுரிமை பதிவாக மாறும் என்றார்.


latest tamil news


ஆனால் தற்போது ராஜ்யசபா எம்.பி.,யாக இருக்கும் அவர் தனது நிலைப்பாட்டை முற்றிலும் மாற்றிக் கொண்டு என்பிஆர்.,க்கு எதிராக பேசி வருகிறார். சமீபத்தில் இது பற்றி அவர் பேசுகையில், பலமான எதிர்க்கட்சி இருந்ததாலேயே எங்களால் என்பிஆரை அமல்படுத்த முடியவில்லை. எங்கள் அரசு அதிகாரிகளால் சரியான கணக்கீடு செய்ய முடியாத நிலை இருந்தது. மக்கள் கதவை மூடிக் கொண்டால், கணக்கீடு செய்ய நாங்கள் வீட்டின் கதவை உடைத்துக் கொண்டா பார்க்க முடியும்? அவர்கள் பதிலளிக்க மறுத்தால் நாங்கள் என்ன செய்ய முடியும்? என பேசி உள்ளார்.

சிதம்பரும் 2012 ல் ஒரு மாதிரி பேசிவிட்டு, அதை அப்படியே மாற்றி 2020 ல் மாற்றி பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

Advertisement




வாசகர் கருத்து (154)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
19-பிப்-202017:03:44 IST Report Abuse
skv srinivasankrishnaveni இதுக்குதான் பேரு பலருக்கும் வாயும்பேசும் சாந்தியும் பேசும் என்று கேலி செய்வாங்க இந்தாளு விஷயமலே அது 100000000%உண்மைஎதானுங்கோ , உண்மைதாகை சோனியா இருக்கும்வரை ராகுல் என்ற பேக்காவதாரம் உள்ளவரை கான் கிரேஸ் கோவிந்தா கோவிந்த தான்
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
19-பிப்-202015:56:40 IST Report Abuse
Endrum Indian குற்றம் சொல்லவேண்டுமானால் இவர்களை தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கும் டாஸ்மாக் நாட்டு "குடி" மக்களை தான் குறை கூற வேண்டும். கொஞ்சம் கூட அவர்களுக்கு சிந்தனை அறிவுத்திறன் இல்லை???பணம் வாங்கு சத்தியம் தவறாமல் நாட்டை நாசம் பண்ணும் அவர்களுக்கு ஒட்டு போடு என்று இருக்கும் வரை இதை மாறவே முடியாது.
Rate this:
Share this comment
Cancel
thulakol - coimbatore,இந்தியா
19-பிப்-202011:26:39 IST Report Abuse
thulakol இந்த துரோகிக்குதான் தமிழக மக்கள் ஒட்டு போட்டு டெல்லி அணுப்பி உள்ளீர்கள் . தமிழனுக்கு வடிவேல் ஜோக் மாதிரி எவ்வளுவு கீலே விழுந்தாலும் புத்தி வராது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X