பர்கா அணிவது வசதியா? அசதியா?: ஏ.ஆர்.ரஹ்மான் மகள் - தஸ்லிமா நஷ்ரீன் மோதல்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

பர்கா அணிவது வசதியா? அசதியா?: ஏ.ஆர்.ரஹ்மான் மகள் - தஸ்லிமா நஷ்ரீன் மோதல்

Updated : பிப் 17, 2020 | Added : பிப் 17, 2020 | கருத்துகள் (140)
Share
புதுடில்லி: பர்கா அணிவது குறித்து எழுத்தாளர் தஸ்லிமா நஷ்ரீன் மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மகள் கதிஜா ஆகியோர் சமூக வலைதளங்களில் ஒருவருக்கொருவர் கருத்து மோதலில் ஈடுபட்டனர்.ஏ.ஆர்.ரஹ்மானின் மகளான கதிஜா, கருப்பு பர்கா அணிந்திருக்குகும் புகைப்படத்தை சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்திருந்தார். இந்த புகைப்படத்தை பிரபல பெண் எழுத்தாளர் தஸ்லிமா
ARRahman, Daughter, Khatija, TaslimaNasreen, Writer, Burqa, பர்கா, ஏஆர் ரஹ்மான், மகள், கதிஜா, தஸ்லிமா நஷ்ரீன், எழுத்தாளர்,

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: பர்கா அணிவது குறித்து எழுத்தாளர் தஸ்லிமா நஷ்ரீன் மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மகள் கதிஜா ஆகியோர் சமூக வலைதளங்களில் ஒருவருக்கொருவர் கருத்து மோதலில் ஈடுபட்டனர்.

ஏ.ஆர்.ரஹ்மானின் மகளான கதிஜா, கருப்பு பர்கா அணிந்திருக்குகும் புகைப்படத்தை சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்திருந்தார். இந்த புகைப்படத்தை பிரபல பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஷ்ரீன், நான் ரஹ்மானின் இசையை விரும்புகிறேன். ஆனால் அவரது மகளை பார்க்கையில் மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. ஒரு கலாச்சார குடும்பத்தில் இருக்கும் படித்த பெண்களைக் கூட மிக எளிதாக மூளைச்சலவை செய்ய முடிகிறது என்பதை பார்க்கையில் வருத்தமளிக்கிறது, என பதிவிட்டார். இந்த பதிவு, இதுவரை 1800 முறை ரீ-டுவிட்களும், 6 ஆயிரம் லைக்குகளும் பெற்றுள்ளன.


latest tamil news


இதற்கு கதிஜா பதிலடி கொடுத்தார். டுவிட்டரில் கணக்கு இல்லாத அவர், தஸ்லிமாவின் பதிவை ஸ்கிரீன் ஷாட் எடுத்து, இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார். அதில், நாட்டில் எவ்வளவோ விஷயங்கள் நடந்துக்கொண்டிருக்கிறது. ஆனால், ஒரு பெண் அணிந்த உடையை பற்றி மக்கள் கவலைப்படுகிறார்கள், என பதிவிட்டார். மேலும் அவர் குறிப்பிட்டுள்ளதாவது: அன்புள்ள தஸ்லிமா, என் உடையினால் மூச்சுத்திணறலை உணர்ந்ததற்காக மன்னிக்கவும். தயவு செய்து கொஞ்சம் புதிய காற்றை பெறுங்கள்.


latest tamil newsநான் பெருமைப்படுவேனே தவிர எனக்கு மூச்சுத் திணறல் ஏற்படாது. பெண்ணியம் பற்றி தெரிந்துகொள்ள கூகுளில் தேடுமாறு கேட்டுக்கொள்கிறேன். ஏனெனில், அது மற்ற பெண்களை தாழ்த்துவதோ, அவர்களின் தந்தையை பிரச்னையில் கொண்டு வருவதோ இல்லை. இவ்வாறு கதிஜா பதிவிட்டிருந்தார். பிரபலமான இருவரும் பர்காவினால் கருத்து மோதலில் ஈடுபட்டது, சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X