அரசியல் செய்தி

தமிழ்நாடு

போராட்டத்தை தூண்டும் விஷமிகள்: முதல்வரின் பேச்சால் திமுக வெளிநடப்பு

Updated : பிப் 17, 2020 | Added : பிப் 17, 2020 | கருத்துகள் (143)
Share
Advertisement

இந்த செய்தியை கேட்க

சென்னை: வண்ணாரப்பேட்டையில் நடந்த போராட்டத்தில் போலீஸ் தடியடியால் முதியவர் இறந்ததாக வதந்தி பரப்பி, மாநிலம் முழுவதும் சில விஷமிகள் போராட்டத்தை தூண்டுவதாக முதல்வர் பழனிசாமி கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தன.latest tamil news


கடந்த பிப்.,14ம் தேதி 2020-21 ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இது குறித்த விவாதம், சட்டசபையில் இன்று (பிப்.,17) நடைபெற்றது. விவாதத்தின்போது, திமுக தலைவர் ஸ்டாலின், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு (சிஏஏ) எதிராக பல்வேறு இடங்களில் போராட்டம் நடந்து வரும்நிலையில், சிஏஏ.,க்கு எதிராக தீர்மானம் கொண்டு வரவேண்டும், விவாதம் நடத்த வேண்டும் என வலியுறுத்தினார். இந்த கோரிக்கையை நிராகரித்த சபாநாயகர் தனபால், தீர்மானம் நிறைவேற்ற வாய்ப்பில்லை என்றும், வண்ணாரப்பேட்டையில் முஸ்லிம்கள் போராட்டத்தில் நடந்த தடியடி குறித்து மட்டும் சட்டசபையில் பேச அனுமதிப்பதாகவும் கூறினார்.


latest tamil news


இதற்கு திமுக எதிர்ப்பு தெரிவித்தது. இதற்கிடையே வண்ணாரப்பேட்டை சம்பவம் குறித்து முதல்வர் பழனிசாமி அளித்த விளக்கம்: சிஏஏ.,க்கு எதிராக வண்ணாரப்பேட்டையில் அனுமதியில்லாமல் போராட்டம் நடந்துள்ளது. இதனால், போராட்டக்காரர்களை கைது செய்ய முயன்றபோது, ஒத்துழைக்க மறுத்து போலீஸ் வாகனங்களை சேதப்படுத்தியுள்ளனர். மேலும், போலீசார் மீது செருப்பு, கற்கள், பாட்டில் வீசப்பட்டன. இதனாலேயே தடியடி நடத்தப்பட்டது. நோயால் இறந்த முதியவரின் படத்தை பகிர்ந்து, போலீஸ் தடியடியால் இறந்ததாக வதந்தி பரப்பி, மாநிலம் முழுவதும் சில சக்திகளும், சில விஷமிகளும் போராட்டத்தை தூண்டி விட்டுள்ளனர். தமிழகத்தில் சிறுபான்மையினருக்கு பாதிப்பு வரும் எந்த திட்டத்திற்கும் அனுமதி இல்லை. முஸ்லிம்களின் அரணாக அதிமுக செயல்படும். இவ்வாறு பழனிசாமி விளக்கமளித்தார்.


latest tamil newsதிமுக வெளிநடப்பு

சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற அரசு தயாராக இல்லாததை கண்டித்தும், முதல்வரின் பதிலை ஏற்க மறுத்தும் திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின் கூறியதாவது: சிஏஏ.,க்கு எதிராக தீர்மானம் கொண்டு வரவேண்டும் என கோரிக்கை வைத்து கேட்டபோதெல்லாம் ஆய்வில் இருப்பதாக கூறினர். ஆனால், தற்போது விவாதிக்காமலேயே கோரிக்கையை நிராகரித்துள்ளனர். ஜல்லிக்கட்டு பிரச்னையில் நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும் போது விவாதித்து தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. ஆனால், தற்போது, நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும் போது விவாதிக்கூடாது என்கின்றனர். இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (143)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
madhavan rajan - trichy,இந்தியா
19-பிப்-202013:09:13 IST Report Abuse
madhavan rajan திமுக காரர்கள் எப்பவுமே உண்மையைப் பேசினால் அந்த இடத்தில் இருந்து வெளிநடப்பு செய்துவிடுவார்கள். பாராளுமன்றத்திலும் அப்படித்தான்.
Rate this:
Cancel
Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா
17-பிப்-202023:53:23 IST Report Abuse
Panneerselvam Chinnasamy ஜெயலலிதா போலவே எடப்பாடியும் வளவள கொழகொழ என்று இல்லாமல் எடுத்த முடிவிலும் கொண்ட கொள்கையிலும் உறுதியாக இருப்பது பாராட்டத்திற்குரியது.
Rate this:
Cancel
VSK - CARY,யூ.எஸ்.ஏ
17-பிப்-202023:07:27 IST Report Abuse
VSK தேர்ந்தெடுக்கப்பட்டதன் கடமையைச் செய்யாது வெளிவருபவர் முகத்தில் சிரிப்பு வெளங்கிரும் தமிழகம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X