சீனாவை சுருட்டிய வைரஸ் உலக பொருளாதாரத்தை உலுக்குது

Updated : பிப் 17, 2020 | Added : பிப் 17, 2020 | கருத்துகள் (20)
Share
Advertisement

இந்த செய்தியை கேட்க

துபாய்: 'சீனாவில் உருவாகி உலகையே உலுக்கி வரும் 'கோவிட்-19' எனப் பெயரிடப்பட்டுள்ள, கொரோனா வைரசால், உலக பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படும்' என, சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா தெரிவித்துள்ளார்.latest tamil news


துபாயில் உள்ள உலக மகளிர் மன்றத்தில் கிறிஸ்டலினா ஜார்ஜீவா செய்தியாளர்களிடம் கூறியதாவது:'கோவிட்-19' தாக்கத்தால், 1,700க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்; 70 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், சீனாவின் ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகம் முடங்கியுள்ளது.


latest tamil news


உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார நாடான சீனா, உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.டி.பி.,) 20 சதவீத பங்கு வகிக்கிறது. வைரஸ் பாதிப்பால், சீனாவிற்கு ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி, உலகப் பொருளாதாரத்திலும் எதிரொலிக்கும். மேலும் உலக அளவில் சுற்றுலா, சரக்குப் போக்குவரத்து சிக்கலுக்கு உள்ளாகியுள்ளன.


latest tamil news


எனவே, உலக பொருளாதார வளர்ச்சி, 2020ம் ஆண்டில், 0.1 முதல் 0.2 சதவீதம் வரையில் வீழ்ச்சியைச் சந்திக்கலாம். வீழ்ச்சிக்கான விகிதத்தை தற்போது துல்லியமாகக் கூறிவிட முடியாது. வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்தாத வரை, இந்த சதவீதம் அதிகரிக்க வாய்ப்பு இல்லை.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


latest tamil news


'கோவிட்-19 பாதிப்பை வேகமாகக் கட்டுப்படுத்துவது மட்டுமின்றி முற்றிலும் அழித்தால் மட்டுமே உலக அளவில் சுற்றுலாவும், வர்த்தகமும் மீண்டெழ முடியும். அப்போதோ இந்த பொருளாதார வீழ்ச்சியில் இருந்து தப்ப முடியும். 'கோவிட்-19' மேலும் தன் ஆதிக்கத்தை செலுத்தினால், சீனா கடும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகும். அப்போது உலகளாவிய வர்த்தகமும் பாதிக்கும். பிற நாடுகளில் இறக்குமதி பொருட்களின் விலை கூடும்' என, பொருளாதார வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sriram V - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
18-பிப்-202008:17:12 IST Report Abuse
Sriram V We must explore this opportunity, we should work with China and their exporters to fill the gap. If we don't get support from China than contact their importers, it's a golden opportunity for india to accelerate the exports
Rate this:
Cancel
Nathan - Hyderabad,இந்தியா
18-பிப்-202006:31:34 IST Report Abuse
Nathan ஒரு வீட்டில் ஒருவருக்கு உடம்பு சரியில்லை என்றால் மொத்த குடும்பமும் துன்பத்திற்குள்ளாகும், சிரமபபடும். அது போல்தான் நாட்டிற்கும், உலகத்திற்கும். ஆரோக்கியம் , பொருளாதாரம், தொழில் எல்லாமே பின்னடைவுதான். இந்த சும்பட்டா விளையாட்டை அடிக்கடி ஆடிப் பார்த்த சைனாவுக்கு, இப்போ சொந்த முதுகில் அடி.
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
18-பிப்-202003:50:36 IST Report Abuse
J.V. Iyer யானை இருந்தாலும் ஆயிரம் போன், இறந்தாலும் ஆயிரம் போன்.
Rate this:
SivaKumar.G - chennai,இந்தியா
18-பிப்-202007:27:18 IST Report Abuse
SivaKumar.Gஆயிரம் போன்ஆ ஐ- போன்ஆ சாம்சங்-ஆ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X