பொது செய்தி

இந்தியா

ஓடும் ரயிலில் சிவபெருமானுக்கு கோயில்

Updated : பிப் 17, 2020 | Added : பிப் 17, 2020 | கருத்துகள் (41)
Share
Advertisement
KashiMahakalExpress, LordShiva, Varanasi, Train, Temple, சிவன், படுக்கை, ஒதுக்கீடு, தனியார், ரயில், வாரணாசி, காசி மஹாகல் எக்ஸ்பிரஸ்,சிவன்கோயில்

இந்த செய்தியை கேட்க

வாரணாசி: வாரணாசி - இந்தூர் இடையே இயக்கப்படும் காசி மஹாகல் எக்ஸ்பிரஸ் ரயிலில் கடவுள் சிவபெருமானுக்கு கோயிலை ஏற்படுத்த ரயில்வே முடிவு செய்துள்ளது.

இந்தியாவின் 3வது தனியார் ரயிலான காசி மஹாகல் எக்ஸ்பிரஸ் ரயிலை, வாரணாசி லோக்சபா தொகுதியில் வெற்றி பெற்ற பிரதமர் மோடி, நேற்று (பிப்.,16) தொடங்கி வைத்தார். இந்த ரயிலில் ஓம்கரேஷ்வர் (இந்தூருக்கு அருகில்), மகாகலேஷ்வர் (உஜ்ஜைன்) மற்றும் காசி விஸ்வநாத் (வாரணாசி) ஆகிய மூன்று ஜோதிர்லிங்கங்களை இணைக்கும் வகையில் இந்த ரயில் விடப்பட்டுள்ளது. இந்த ரயிலில் சைவ உணவு மட்டுமே விநியோகிக்கப்படும்.


latest tamil news


இதில், மூன்றாம் வகுப்பு ஏ.சி., பெட்டியான 'பி5'ல் உள்ள 64ம் எண் படுக்கையில் சிவனின் உருவப்படங்கள் வைக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதனை சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட சிறு கோயிலாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இந்த படுக்கையை, சிவனுக்கு ஒதுக்கியுள்ளதால், பயணிகள் யாரும் இந்த எண் கொண்ட படுக்கையை முன்பதிவு செய்ய முடியாது என ரயில்வே நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kumar periyaar - Chennai,இந்தியா
18-பிப்-202018:26:25 IST Report Abuse
Kumar periyaar கடவுளேயே அங்கும் இங்கும் தூக்கி கொண்டு செல்பவர் ட்ரெயின் வாகன ஓட்டுநர் தான்
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
18-பிப்-202010:03:05 IST Report Abuse
Girija இந்து கோழைகள் செகுலரிஸ்ம் என்ற போர்வையில் ஒளிந்து கொள்கின்றனர். காசி மஹாகல் ரயில் இந்து யாத்திரைக்கான ரயில், அதில் பயணம் செய்பவர்கள் அனைவரும் புனித யாத்திரை செல்பவர்கள். இதில் விரதம் இருந்து மூன்று கால பூஜைகள் செய்து பயணிப்பவர்கள் அதிகம் , ஓடும் ரயிலில் பூஜை செய்ய வழிபாடு நடத்த ஒரு இடம் அவசியம். இதில் அதற்கேற்ற முறைகள் செய்தால் என்ன தவறு ? மத்திய கிழக்கு நாடுகளில் எல்லா இடங்களிலும் அரசு தனியார் தொலைதூர போக்குவரத்துகளில் பிரேயர் ரூம் என்று கட்டாயமாக உள்ளது. இந்த வசதி இல்லாத போக்குவரத்துக்கள் தொழுகை நேரத்தில் கண்டிப்பாக நிறுத்தி பயணிகள் தொழுகை வழிபாட்டை நடத்த உதவி வேண்டும் . அரசு மெக்கா எக்ஸ்பிரஸிலோ , ஜெருசலம் எக்ஸ்பிரஸிலோ, புத்த கயா எக்ஸ்பிரஸிலோ அல்லது மற்றைய அணைத்து ரயில்களிலோ இதை அமைக்கவில்லை . இந்து என்று சொல்வதில் என்ன பயம்? மற்றவன் இழிவு செய்வான் என்று பயமா? அடிப்பான் என்று பயமா? அல்லது சமீபகாலமாக கொலைகள் செய்கின்றனரே அதனால் பயமா?
Rate this:
Cancel
G.Prabakaran - Chennai,இந்தியா
18-பிப்-202004:01:49 IST Report Abuse
G.Prabakaran எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்த பிறகு ரயில்வே இப்போது அந்த ஏற்பாடு ஓர் நாள் பூஜைக்கு மட்டும் என்று பல்டி அடித்துள்ளது. அவ்வாறு நிரந்தர ஏற்பாடு செய்ய வில்லை என மிக பெரிய பொய்யை வேறு சொல்லி உள்ளது. பிஜேபி அரசு எந்த தவறை செய்தாலும் அதனை ஏற்றுக்கொண்டு வருத்தம் தெரிவிக்காமல் பொய்களை மட்டுமே சொல்லும் கட்சி என்பதை இவர்களின் மு - தனமான செயல் மூலம் மீண்டும் நிரூபித்துள்ளது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X