அரசியல் செய்தி

தமிழ்நாடு

வேளாண் மண்டலத்துக்கு யார் அனுமதி பெறுவது?: திமுக - அதிமுக காரசாரம்

Updated : பிப் 17, 2020 | Added : பிப் 17, 2020 | கருத்துகள் (40)
Share
Advertisement

இந்த செய்தியை கேட்க

சென்னை: டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக்க மத்திய அரசிடம் அனுமதி பெறுவது குறித்து சட்டசபையில் அதிமுக, திமுக இடையே காரசார விவாதம் நடந்தது.



latest tamil news



முதல்வர் பழனிசாமி சமீபத்தில், காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றப்படும் என்றும், அதற்காக சிறப்பு சட்டம் கொண்டு வரப்படும் எனவும் அறிவித்திருந்தார். இதற்கு வரவேற்பு தெரிவித்த திமுக தலைவர் ஸ்டாலின், இதனை மத்திய அரசு தான் அறிவிக்க வேண்டும். ஆனால், மாநில அரசு இப்படியான அறிவிப்பை வெளியிட்டு மக்களை ஏமாற்றுகிறது, என்றார்.
இந்நிலையில், இன்று (பிப்.,16) நடந்த சட்டசபை கூட்டத்தொடரில், அமைச்சர் தங்கமணி பேசுகையில், முதல்வர் விவசாயியாக இருந்த காரணத்தால் டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தார், என்றார்.


latest tamil news



அப்போது எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன் குறுக்கிட்டார். அவர் பேசியதாவது: முதல்வரின் இந்த அறிவிப்பை திமுக வரவேற்கிறது. ஆனால், டெல்டா மாவட்டங்களில் வேதாந்தா உள்ளிட்ட நிறுவனங்கள், எந்த பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது என சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய பிறகு, இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்க வேண்டும். இவ்வாறு துரைமுருகன் பேசினார்.


latest tamil news



துரைமுருகனின் கருத்துக்கு பழனிசாமி அளித்த பதில்: கடந்த காலங்களில் அதிமுக எம்.பி.,க்கள் பார்லியில் சீட்டை தேய்த்து கொண்டிருக்கிறார்கள் என திமுக விமர்சித்தது. தற்போது திமுக தான் அதிக எம்பி.,க்களை கொண்டுள்ளது. அவர்கள் மத்திய அரசிடம் வாதிட்டு, வேளாண் மண்டலத்திற்கு அனுமதி பெற்றுத்தர வேண்டும். இவ்வாறு அவர் பதிலளித்தார்.
இதற்கு குறுக்கிட்டு பதிலளித்த துரைமுருகன், நீங்கள் அறிவிப்பீர்கள், நாங்கள் அனுமதி பெற்று தர வேண்டுமா?. நாங்கள், அதிமுக.,வை போல மத்திய அரசிடம் ஒட்டி உறவாடவில்லை. எதிரும், புதிருமாக இருக்கிறோம், என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (40)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NATARAJAN - Coimbatore,இந்தியா
18-பிப்-202008:31:52 IST Report Abuse
NATARAJAN திருந்தாத ஜென்மங்ககள் இருந்தென்ன லாபம்
Rate this:
Cancel
amma - montreal,கனடா
18-பிப்-202008:08:36 IST Report Abuse
amma கலைஞரின் டூ ஜிஊழலில்பெட்டியை கொடுத்து வெளியேய் வந்தவர்களை சுட்டி காட்டாமல் தமிழகத்தை முன்னோடி மாநிலலம் ஆகிய இரும்பு பெண் அம்மாவை குற்றம் சொல்லுவதை விட்டு விட்டு யார் நல்லது செய்தல் அவர்களை பெரும் தன்மையடன் வாழ்த்த பழகி கொள்ளுங்கள்.
Rate this:
Cancel
murali - Chennai,இந்தியா
17-பிப்-202021:37:36 IST Report Abuse
murali CAA வுக்கு எதிராக தி மு க எம் பி கள் ராஜினாமா செய்யப்போவதாக வதந்தி. உண்மையா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X